Header Ads



கடந்த 4 வருடங்களாக JVP ஐக்கிய தேசியக் கட்சியின் தேவைக்கு ஏற்றவாறு செயற்பட்டது


கடந்த நான்கு வருடங்களாக மக்கள் விடுதலை முன்னணி தமது அடிப்படை கொள்கைகளை கைவிட்டு ஐக்கிய தேசியக் கட்சியின் தேவைக்கு ஏற்றவாறு செயற்பட்டதாக முன்னிலை சோசலிச கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் துமிந்த நாகமுவ தெரிவித்துள்ளார். 

கடவத்த பகுதியில் நேற்று (18) மாலை இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார். 

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் கடந்த காலங்களில் தொழிலாளர்களுக்கு அதிகாரமளிக்கும் சட்டமூலம் என்ற ஒன்றை நாடாளுமன்றத்தில் முன்வைப்பதாக அந்த கட்சி கூறியதாகவும் அதனூடாக தொழிலாளர்களுக்கு எட்டு மணித்தியால பணி முறைமை இல்லாது செய்ய முயற்சிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். 

அதேபோல், வருடம் ஒன்றுக்கு தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் 29 நாட்கள் விடுமுறையை ஒன்பது நாட்களுக்கு மட்டுப்படுத்துவதற்கும் மேலும் தொழிலில் இருந்து தொழிலாளர்களை எந்த வேளையிலும் வெளியேற்றலாம் என்ற நிலைமையும் இதில் காணப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். 

பயங்கரவாதச் சட்டத்தை அமல்படுத்தியமைக்கு எதிராக ஜே.வி.பி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்த அவர் ஆனால் ரணில் விக்கிரமசிங்கவின் பிரதமர் பதவி பறிபோவதற்கு எதிராக நீதிமன்றத்தை நாட அவர்கள் தயங்கவில்லை எனவும் கூறினார்.

No comments

Powered by Blogger.