Header Ads



29 பள்ளிவாசல்கள் இணைந்து செய்த, முறைப்பாட்டுக்கமைய கைதானவர் இன்று விடுவிப்பு


பொலன்னறுவை மாவட்டத்தைச்சேர்ந்த 29 பள்ளிவாசல்களின் சம்மேளனத்தின் முறைப்பாட்டிற்கிணங்க கடந்த 5/5/2019 அன்று பொலன்னறுவை பொலிசாரினால் ஏகத்துவாதியான அமீன் GS கைது செய்யப்பட்டு DO மற்றும் நீதவானின் கட்டளைகளின் படி கடந்த 5 மாதங்களாக சிறைவாசம் அனுபவித்து வந்தார்.

இவருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட இரு குற்றச்சாட்டுகளாவன:-

1.நீதிக்குப்புறம்பாக பெறப்பட்ட 24 மில்லியன் பணம் வங்கிக்கணக்கில் வைத்திருந்தார் ,

2. 21/4 குண்டு வெடிப்புகளின் பின்னர் சமூக ஊடகங்கள் அரசினால் தடை செய்யப்பட்டிருந்த காலங்களில் அடையாளம் காணப்படாத வெளிநாட்டு தொலைபேசி இலங்கங்களுடன் தொடர்பேற்படுத்தி பயங்கரவாதவிடயங்கள் தொடர்பாக பேசினார் என்பவைகளே சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள்.

உண்மை நிலையென்ன?

1. கடந்த 2001 தொடக்கம் 2019 வரை குறித்த அமீன் GS அவர்களின் வங்கிக்கணக்கில் இருந்த முழுத்தொகையையும் கூட்டினாலும் குற்றச்சாட்டில் கூறப்பட்ட தொகையுடன் எவ்வித சம்பந்தமுமில்லை என்பதுடன் தற்போதைய வங்கியிருப்பு வெறும் 7400/= ஆகும்.

2.வெளிநாட்டிலிருந்து தொடர்பு கொண்டவர் GSன் மனைவியின் சகோதரனே .

அல்ஹம்துலில்லாஹ் இந்த உண்மை நிலைமை என்ன? என்பது பற்றி சட்டமா அதிபர் தினைக்களம் மற்றும் நீதவான் உட்பட அனைவரும் தெளிவு பெற்ற பின் இன்று 1.10.2019 பொலன்னறுவை நீதவான் சுரங்க அசேல சில்வாவினால் ரூ.500,000/= பெறுமதியான இரு சரீரப்பிணைகளில் அமீன் GS விடுதலை செய்யப்பட்டார் அல்ஹம்து லில்லாஹ்.

இந்த வழக்கில் சிரேஷ்ட சட்டத்தரணி சறூக் மற்றும் அவரது மனைவி நுஷ்ரா சறூக்கும் சந்தேக நபர் சார்பில் சட்டமா அதிபர் திணைக்களத்திலும் இன்றைய வழக்கிலும் ஆஜராகியிருந்தனர்.

பொலன்னறுவை மாவட்ட 29 பள்ளிகளின் சம்மேளனமும் , ஏகத்துவத்தை தெரியாத ஊர்மக்களும் குறித்த பொய்குற்றச்சாட்டுகளுக்குமாக சுமார் 5 மாத சிறைவாசத்துக்கு துணை போயுள்ளனர்.

குறிப்பிட்ட 29 பள்ளிவாசல்கள் சேர்ந்தவர்களில் பலருக்கு தாம் எதற்காக கையொப்பமிட்டுக்கொடுத்தோம் என்பது கூட தெரியாத ஒரு நிலை துரதிஷ்டவசமாகும்.

சட்டத்தரணி சரூக்

3 comments:

  1. முட்டாள்கள் இன்னும் நமது சமூகத்தில் அதிகமாக உள்ளனர்.ஆனால் சரூக் அவர்களே நீதிக்கான உங்கள் போராட்டம் உண்மையில் யாராலும் மறக்க முடியாத பெரும் சேவை.

    ReplyDelete
  2. இவங்கட ஏகத்துவத்தால் வந்த பிரச்சினைகள் தானே இன்னும் முடியல்ல எல்லாத்தயும் விட்டுட்டு புனித இஸ்லாத்தில் நுழையுங்கடா.

    ReplyDelete
  3. @yaseer eahattuwam eanral eana eandu theriya pola? kalima 4 in meaning ah parugka.konjom quran ah read panugka hathees ah thedi padigka.ondume mudiyadhu eandal asmahul hussna da meaning ah padigka adhu podhum nervazhi adaiya.

    ReplyDelete

Powered by Blogger.