Header Ads



டுபாயில் 27 இலங்கை முஸ்லிம், இளைஞர்கள் கைது..? ஜமாத்தே இஸ்லாமியுடன் தொடர்பா...??

ஐக்கிய அரபு எமிரேட்ஸில்  25 முதல் 27 இலங்கை முஸ்லீம் சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சில தகவல்கள் வெளியாகியிருந்தன.

இலங்கை ஜமாத்தே இஸ்லாமியுடன், ஒரு வட்டமாக இவர்கள் பணியாற்றினர் என்றும் இதையடுத்தே அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது.

எனினும் இதுதொடர்பில் தாம் எதனையும் அறிந்திருக்கவில்லை என இலங்கை  ஜமாத்தே இஸ்லாமியுடன் தொடர்புடைய நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும் தமது ஜமாத்திலிருந்து ஒருவர் வெளிநாடு சென்றுவிட்டால், தமது இயக்கத்தின் யாப்பின்படி அவர்கள் ஜமாத்தை விட்டு விலகியவர்களாக கருதப்படுவார்கள் எனவும், அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments

Powered by Blogger.