Header Ads



யாழ்ப்பாணத்தில் 250 முஸ்லிம் குடும்பங்களுக்கு வீடுகள் - அமைச்சரவை அங்கீகாரம்

யாழ்ப்பாணத்தில் 250 முஸ்லிம் குடும்பங்களிற்கான வீட்டுத் திட்டம் அமைக்க அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

யாழ்ப்பாணத்தின் அராலி, பொன்னாலை சந்திப்பகுதியில் உள்ள 7.5 ஏக்கர் காணியில் இந்த வீடுகள் அமையவுள்ளன. 600 சதுர அடிகளை கொண்ட இரண்டு மாடிகளை கொண்ட இரட்டை வீடுகளாக ஒவ்வொன்றும் அமையும்.

இறுதியாக பிரதமர் யாழ்ப்பாணம் சென்றிருந்த போது , இந்த வீட்டுத் திட்டத்திற்கு ஆலோசனை செய்திருந்தார்.

அதற்கு முன்னர் பிரதமர் யாழ்ப்பாணம் சென்றிருந்த போது, வீட்டுத்திட்டத்திற்கான முதற்கட்ட ஆலோசனையை அமைச்சர் ரிசாத் பதியுதீன் மற்றும் யாழ். முதல்வர் ஆகியோர் முஸ்லிம் மக்களுடன் இணைந்து மேற்கொண்டனர்.

No comments

Powered by Blogger.