Header Ads



மன்னாரில் 20 வீத முஸ்லிம்களின் பெயர்கள், வாக்காளர் இடாப்பிலிருந்து நீக்கம் - மாபெரும் உரிமை மீறல்

மன்னார் மாவட்டத்தில் சுமார் 20 வீதமான முஸ்ஸீம் வாக்காளர்களின் பெயர் வாக்காளர் இடாப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளமையானது முஸ்ஸீம் மக்கள் மத்தியில் ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹுனைஸ் பாறூக் தெரிவித்தார்.

மன்னாரில் இன்று -11- மதியம் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

2019ஆம் ஆண்டு மன்னார் மாவட்ட வாக்காளர் இடாப்பில் இருந்து வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளமை தொடர்பாக கோரிக்கை கடிதம் ஒன்றை மன்னார் மாவட்ட உதவித்தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பி வைத்துள்ளேன்.

கடந்த பல வருடங்களாக மன்னார் மாவட்ட தேர்தல் டாப்பில் பெயர்கள் குறிப்பிடப்பட்டு தொடர்ச்சியாக சுமார் 20 வருடங்களுக்கு மேலாக வாக்களித்து வந்த சிலரது பெயர் இம்முறை வாக்காளர் டாப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

இவ்விடையம் தொடர்பில் பாதீக்கப்பட்ட பலர் எனது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

இவ்வாறு வாக்காளர் டாப்பில் இருந்து பெயர் நீக்கப்பட்டமை சட்டத்திற்கு முறனான செயல் என்றும், இதற்கு எதிராக தகுதி வாய்ந்த நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்கான ஏற்பாட்டை மேற்கொள்ளுமாறு பாதீக்கப்பட்டவர்கள் என்னை நாடியுள்ளனர்.

நான் முதற்கட்ட நடவடிக்கையாக மன்னார் மாவட்ட உதவித்தேர்தல் ஆணையாளருக்கு கோரிக்கை கடிதத்தை அனுப்பியுள்ளேன்.

மன்னார் மாவட்டத்தை பொறுத்தவரையில் சுமார் 25 வீதமான முஸ்ஸீம் வாக்காளர்கள் இருக்கின்றார்கள்.அதில் சுமார் 20 வீதமான வாக்காளர்களின் பெயர் நீக்கப்பட்டுள்ளமையானது முஸ்ஸீம் மக்கள் மத்தியில் ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

குறித்த நடவடிக்கையானது வன்னி மாவட்டத்தில் முஸ்ஸீம் அரசியல் பிரதிநிதித்துவத்தை குறைப்பதற்கு எடுக்கின்ற நடவடிக்கையா?அல்லது மன்னார் மாவட்டத்தில் சமாதானமாக இருக்கின்ற முஸ்ஸீம்,தமிழ் உறவுகளை பிரிப்பதற்கான ஒரு சதி முயற்சியா? என்கின்ற சந்தேகம் எழுகின்றது.

பெயர் நீக்கப்பட்டுள்ளவர்களை பார்க்கின்ற பொழுது அதிபர் ஆசிரியர்கள் உள்ளடங்களாக சுமார் 30 வருடங்களுக்கு மேல் வாக்களித்தவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது.

தேர்தல் திணைக்களத்துடன் தொடர்புடைய தேர்தல் கடமைகளை மேற்கொள்ளுகின்றவர்கள் இவர்களைப் பற்றி நன்கு அறிந்து கொள்ளாத நிலையில் பெயர் நீக்கப்பட்டுள்ளமையானதுமுஸ்ஸீம்கள் மத்தியில் மன்னார் மாவட்டத்தில் அச்சத்தையும்,சந்தேகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

1990 ஆம் ஆண்டு பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸஸீம் மக்கள் இன்று நிம்மதியாக வாழ்கின்ற இந்த காலத்தில் அவர்கள் வாக்களிக்கின்ற உரிமையை மறுக்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது.

அவர்கள் இந்த மாவட்டத்தில் வசிக்கின்றார்கள் என்பது தெரிந்து கூட பெயர் நீக்கப்பட்ட செயலானது அவர்களுக்கு பாரிய அதிர்ப்தியை ஏற்படுத்தி உள்ளது.

2017 ஆம் அண்டு 10 ஆம் இலக்க வாக்காளர்களை திருத்துவதற்கான விசேட சட்ட ஏற்பாடு ஒன்று பாராளுமன்றத்தில் இயற்றப்பட்டது.இச்சட்டத்தின் 6 ஆவது பிரிவு முக்கியமாக சொல்கின்றது 2009 ஆம் ஆண்டிற்கு முன்னர் ஒருவர் அலல்து அவருடைய தந்தையோ அல்லதுமுதாதையர்களோ ஏதாவது ஒரு மாவட்டத்தில் வாக்களித்து இருந்தால் அவர்கள் தொடர்ந்தும் எதிர் வருகின்ற 2021 ஆம் ஆண்டு வரை அந்த மாவட்டத்தில் வாக்களிப்பதற்கு உறித்து பெற் வேண்டும் என்பதற்காக அந்த விசேட சட்ட ஏற்பாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறான சட்ட ஏற்பாடுகள் இருக்கின்ற சந்தர்ப்பத்தில் ஏன் உதவித்தேர்தல்ஆணையாளர் இந்த மாவட்டத்திற்கு பொறுப்பாக தேர்தலில் கண்காணிப்பில் ஈடுபட்டுஇருக்கின்றவர்கள் சுமார் 6500 வரையிலான முஸ்ஸீம் மக்களின் வாக்குகள் வெட்டப்பட்டுள்ளதை என்ன நோக்கத்திற்காக பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்

என்பது தொடர்பில் மக்கள் மத்தியில் பாரிய கேள்விக்குறியாக இருக்கின்றது. -எனவே அடுத்த கட்ட நகர்வாக தகுதி வாய்ந்த நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம் என தெரிவித்தார்.குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் சட்டத்தரணி எம்.எஸ்.ஹஸ்மி கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. இந்த பௌத்த பிக்குகளும், முஸ்லிம்களும் ஏன் மதம்-தை வைத்து அரசியல் செய்கிறார்கள்?

    ReplyDelete

Powered by Blogger.