Header Ads



15 முதல் 25 வரை தேவாலயங்கள் மீது தாக்குதல் இடம்பெறலாம் - ஜனாதிபதிக்கு மல்கம் ரஞ்சித் கடிதம்

கர்தினால் மல்கம் ரஞ்சித் கத்தோலிக்க தேவாலயங்கள் மீது மற்றுமொரு தாக்குதல் இடம்பெறலாம் என எச்சரித்துள்ளார் என சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்து சண்டே டைம்ஸ் மேலும் தெரிவித்துள்ளதாவாது.

ஓக்டோர்பர் மாதம் 15 திகதி முதல் 25 திகதி வரையான காலப்பகுதியில் இலங்கையில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது மீண்டும் தாக்குதல் இடம்பெறலாம் என்ற அச்சம் காரணமாக பாதுகாப்பு தரப்பினரும் காவல்துறையினரும் நாடு முழுவதிலும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களின் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.

இது குறித்த முதலாவது எச்சரிக்கையை கர்தினால் மல்கம் ரஞ்சித்தே விடுத்துள்ளார்.

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில்  குறிப்பிட்ட காலப்பகுதியில் பாதுகாப்பை அதிகரிப்பது குறித்து கவனம் செலுத்துமாறு காவல்துறையினரையும் படையினரையும் கேட்டுக்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதேவேளை தாக்குதல்கள் குறித்த புதிய தகவல்களை  அரச புலனாய்வு பிரிவினர் ஆராய்ந்துள்ளனர். 

இதன் பின்னர் தேசிய புலனாய்வு பிரிவின் தலைவர் இதனை உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார்.இதனை தொடர்ந்து கடற்படை விமானப்படையினரும் இது குறித்து எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பாதுகாப்பு வட்டாரங்கள் பலவிதமான பாதுகாப்பு நடவடிக்கைகளில் படையினர் காவல்துறையினருக்கு உதவுவார்கள் என தெரிவித்துள்ளன.

கத்தோலிக்க தேவாலயங்களிற்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதுஎனவும் அவை குறிப்பிட்டுள்ளன.

இந்த எச்சரிக்கையை தொடர்ந்து காவல்துறையினர்  ஹோட்டல்களிற்கு விஜயம் மேற்கொண்டு அங்கு தங்கியிருப்பவர்கள் குறித்த விபரங்களை பெறத்தொடங்கியுள்ளனர்  மேலும் சந்தேகத்திற்கு இடமான நபர்கள் எவராவது தென்பட்டால் அது குறித்து அறிவிக்குமாறும் கோரியுள்ளனர்.

வன்முறைகளை திட்டமிடுபவர்கள் யார் என்பது தங்களிற்கு தெரியும் என குறிப்பிட்டுள்ள காவல்துறையினர்  நிலைமைய உன்னிப்பாக அவதானிப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதேவேளை  உறுதிப்படுத்தப்படாத தகவல்களை அடிப்படையாக வைத்து ஹோட்டல்களிற்கு எச்சரிக்கை கடிதத்தை அனுப்பிய காவல்துறை அதிகாரிகள் குறித்து  விசேட விசாரணைகள் இடம்பெறுவதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

3 comments:

  1. உண்மையான செய்தி, முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்வது நல்லது, தீவிரவாதிகள் மட்டுமல்ல அரசியல்வாதிகளும் நமக்கு ஆதரவைப் பெற்றுக்கொள்ள இவ்வாறு நடவடிக்கைகளை திரைமறைவில் மேற்கொள்வார்கள்.

    ReplyDelete
  2. இந்த தகவல் எவ்வாறு திரு.கர்தினாலுக்கு கிட்டியது,எனவே தகவல் அளித்தவர்கலின் மூலம் இவ்வாறான பயங்கரவாத சம்பவத்தை திட்டமிடும் நபர்களை உடனே கைது செய்யலாம் அல்லவா? வன்முறைகளை திட்டமிடுபவர்கள் யார் என தங்களுக்கு தெரியும் என சொல்லும் காவல்துரை ஏன் உன்னிப்பாக அவதானிக்க வேண்டும்? விரைந்து கைது செய்ய வேண்டியதுதான் ஆனால் பேச்சலவில்தான் எல்லாமே செயல் அளவில் அனைத்துமே பூச்சியம்.

    ReplyDelete
  3. May Allah Protect Our country and its people from all DEVILS and EVILS that may come from inside or outside.

    ReplyDelete

Powered by Blogger.