Header Ads



கோத்தாவின் தேர்தல் அறிக்கையில் உள்ள, பிரதான 10 விடயங்கள் இதோ

நாட்டு மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு முன்னுரிமை வழங்கி எவரது நிபந்தனைகளுக்கும் அடிபணியாமல் தேர்தல் கொள்கை  பிரகடனத்தை உருவாக்கியுள்ளதாக தெரிவித்த பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ, ஆட்சிக்கு வந்து குறுகிய காலப்பகுதியில் இக்கொள்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றும் உறுதியளித்தார். 

பொதுஜன பெரமுனவின் தேர்தல் விஞ்ஞானம் இன்று -25- நெலும் பொகுன பிரதான அரங்கில்  உத்தியோகப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

தேசிய பாதுகாப்பு 

நாட்டின் தேசிய பாதுகாப்பு வீழ்ச்சியடைந்தால் ஏனைய அடிப்படை துறைகள் அனைத்தும் இயல்பாகவே வீழ்ச்சியடையும் என்பதை நடைமுறை நிலைமையினை அடிப்படையாகக்கொண்டு அறிந்துக் கொள்ளலாம். அனைத்து மட்டங்களிலும் முன்னேற்றமடைய வேண்டுமாயின் தேசிய பாதுகாப்பிற்கே எந்நிலையிலும் முன்னுரிமை கொடுக்க வேண்டும். ஜனநாயகத்தை மதித்து அனைவருக்கும் பொதுவான அமைதியான சூழலை ஏற்படுத்தும் விதத்தில் தேசிய பாதுகாப்பு பலப்படுத்தப்படும்.

நற்புறவுடனான வெளிநாட்டு கொள்கை 

நாட்டின் கௌரவமான கொள்கைகள் சர்வதேச மட்டத்தில் வெளிநாட்டு கொள்கைகளின் ஊடாகவே வெளிப்படுத்தப்படும். நாட்டின் இறையாண்மையில் தலையிடுவதற்கும், நாட்டின் நிலப்பரப்பினை பிறிதொருவருக்கு கையளிப்பதற்கான ஒப்பந்தங்களை அடிப்படையாகக் கொண்ட வெளிநாட்டு கொள்கைகள் நிராகரிக்கப்படும் அனைத்து நாடுகளுடன்  என்றும்  நற்புறவுடன் செயற்படும் கொள்கைத்திட்டங்கள் செயற்படுத்தப்படும்.நற்புறவுடனான  வெளிநாட்டு கொள்கை'   முழுமைப்படுத்தப்படும்.

ஊழல் மோசடியற்ற  அரச நிர்வாகம்

மக்களின் தேவைகளை நிறைவேற்றும் அரச நிர்வாக கட்டமைப்பு   ஸ்தாபிக்கப்படும்.முறையான கொள்கைகளை கொண்டு  மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகள் செயற்படுவதற்கான ஊழலற்ற  முகாமைத்துவம் கட்டாயமாக்கப்படும்.

மக்களுக்கு பொறுப்பு கூறும் அரசியலமைப்பு மீள்திருத்தம்

அரச கட்சிகளினதும், அரசியல் தலைவர்களினதும்  தேவைக்காகவும், தனிப்பட்ட தேவைக்காகவும்  அரசியலமைப்பினை பயன்படுத்திய  காலம் நிறைவுப் கொண்டு வரப்படும். அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முரண்பாடான விடயங்கள் நீக்கி  மக்களாணையினை மையப்படுத்தியதும், பொறுப்பு கூறும் விதத்தில்  புதிய அரசியலமைப்பு மீள்திருத்தம் செய்யப்படும்.

மாற்றம் கொண்ட பிரஜை - வளமான மனித வளம்

நாட்டு மக்களின் தேவைகளை கருத்திற் கொண்டும் மாறி வரும் உலக நடப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தல்  அவசியம்.  திறன் விருத்தி, சுகாதார கட்டமைப்பு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளில் மாற்றம் கொண்டுள்ள மக்களின் கருத்துகளுக்கு முன்னுரிமை. அத்துடன்  வளமான மனித வளங்கள் துறைசார் விருத்திக்கேற்ப  கட்டியெழுப்பல்.

மக்களை மையப்படுத்திய பொருளாதாரம்

தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டுமாயின் உள்ளூர் வியாபாரிகள் பலப்படுத்த வேண்டும். இதன்  முழு பொறுப்பினையும் அரசாங்கம் ஏற்கும்.   வியாபாரிகள் எதிர்க் கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும்.  தேசிய பொருளாதாரத்தினை மேம்படுத்துவதற்கு   தொழினுட்ப துறைசார் விருத்திகளை அரசாங்கம் அனைதது கிராமிய மட்டத்தில் மேம்படுத்தும்.

தகவல் தொழினுட்ப விருத்தி

பூகோள தொழினுட்ப விருத்தி  மற்றும் அடிப்படை தகவல் தொழினுட்பம் ஆகியவையே இன்றைய இளம் சந்ததியினருக்கு   அரசாங்கம் வழங்கும் வரப்பிரசாதமாகும் நாட்டின் முன்னேற்றத்திற்கு  தகவல் தொழினுட்பத்தின் பங்களிப்பு இன்றியமையாதது. தகவல், திறன் விருத்தி மற்றும்  கல்வித்துறை விருத்தி ஆகியவற்றில் முன்னேற்றமடைந்த சமுதாயம்  உருவாக்கப்படும்.

பௌதீக வள அபிவிருத்தி

பௌதீள  வளங்களை பயனுடையவதாக மாற்றும் திட்டங்கள் செயற்படுத்தப்படும்.  ஒவ்வொரு பிரதேசங்களிலும் உள்ள பௌதீள  வளங்கள் அங்கு வாழும் மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்யும் விதத்தில் மாற்றியமைக்கப்படும்.

சுற்று சூழல் பாதுகாப்பு முகாமைத்துவம்

இயற்கை வளங்களை பாதுகாப்பது அனைவரது  பொறுப்பாகும்.  எதிர்கால சந்ததியினரின்  ஆரோக்கியத்திற்காகவும், வாழ்வாதார இருப்பிற்காகவும் இயற்கை வளங்கள், சுற்றுசூழல் பாதுகாக்கப்பட வேண்டும்.சுற்று சூழல்  முகாமைத்துவத்திற்காக  முறையாக கட்டமைப்புக்கள்  செயற்படுத்தப்படும். சுற்றுசூழல்  தொடர்பில் நடைமுறையில் உள்ள சட்டங்கள் மீள் திருத்தம் செய்யப்படும் அத்துடன் காலத்தின் தேவைக்கேற்ப சுற்று சூழல் சார் திட்டங்கள் வகுக்கப்படும்.

சட்டத்தினை மதிக்கும் ஒழுக்கமுள்ள சமூகம்.

சட்டம் அனைத்து தரப்பினருக்கும் பொதுவானதாக  செயற்படுத்தப்படும்.சட்டத்தினை அவைரும் மதிக்கும் நிலைமையினை சமூகத்தின் ஏற்படுத்தல் பிரதானமாகும். எவருக்கும் எந்நிலையிலும் சட்டத்தின் பிரகாரம்  முன்னுரிமை கொடுக்காது . கௌரவத்தின் பிரகாரம் ஒழுக்கமுள்ள  சமூகம் தோற்றுவிக்கப்படும்.


1 comment:

  1. CONGRATULATIONS TO POHOTTUVA,
    POHOTTUVATA JAYAVEVA.
    GOTABAYA RAJAPAKSA APAY
    JANADIPATHITHUMATA,JAYAVEAMAHINDA
    JANADIPATHITHUMATA,JAYAVEVA.



    ReplyDelete

Powered by Blogger.