Header Ads



UNP மட்டும் தனித்து போட்டியிட்டு, ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்ட முடியாது - ரணில்


ஐக்கிய தேசியக் கட்சியினால் மட்டும் தனித்து போட்டியிட்டு ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்ட முடியாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சிவில் அமைப்புக்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் இன்று அலரி மாளிகையில் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

விரிவான கூட்டணி உருவாக்க கூடிய அதற்கான செயற்பாட்டு திட்டமொன்றை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட உத்தேசித்துள்ள அனைத்து நபர்களுக்கும் தாம் ஆலோசனை வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த அனைத்து விடயங்களையும் கவனத்திற் கொண்டு கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது பற்றி நிர்ணயம் செய்யப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் வாக்கு அடிப்படை மட்டும் போதுமானதல்ல எனவும் நட்பு சக்திகளையும் ஒன்றிணைத்துக் கொள்ள வேண்டியது அவசியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட உத்தேசித்துள்ள அனைத்து நபர்களிடமும் வெற்றியீட்டக் கூடிய வழிமுறைகளை முன்மொழியுமாறு தாம் கோரியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

3 comments:

  1. If you resign UNP will win definitely
    It's time to pack up and fuckoff for the benefit of the country and the UNP.

    ReplyDelete
  2. மங்களசமரவீர,கபீர் ஹாசிம் உற்பட யூஎன்பீயின் முக்கிய ஒருசிலர் அவசரப்படுவதாகவும் ரணிலிடம் உள்ள தூரநோக்கும் பிரச்சனைகளை அணுகும் விதமும் மற்றவர்கள் தவறாகப் புரிந்துகொள்கின்றனர்போல் தெரிகிறது.ஏனெனில் இந்த நாட்டின் படித்த வர்க்கம் நாட்டின் தேசிய பிரச்சனைகளைத் தீர்க்கம் ஆற்றல் ரணிலுக்கு இருப்பதாக நம்பி செயற்படுகின்றது.எனவே, இன்னும் காலநேரத்தை வீணாக்காமல், யூஎன்பீ கட்சியின் முக்கிய அங்கத்தவர்களும் ஏனையவர்களும் ரணிலின் ஆலோசனைக் கவனமாகக்கேட்டு இந்த நாட்டு மக்களின் நன்மைக்கும் இந்த நாட்டின் நற்பெயருக்கும் இழுக்கு ஏற்படாத வகையில் கட்சியைப் பலப்படுத்த முயற்சி எடுக்க வேண்டும்.

    ReplyDelete
  3. Because mr ranil your activities and your past bad governce bring
    This situation for unp.
    Last 4years your leadership nothing did anything for our country.1977to 1987 unp one of strong govt and unp by JR.BUT YOUR LAST 4YEARS YOU SPOILED THE ENTIRE COUNTRY.SO GIVE THE LEADER SHIP FOR YOUNG FELLOWS AND STEP DOWN.

    ReplyDelete

Powered by Blogger.