Header Ads



சஜித்திற்கு UNP வேட்புமனு வழங்க வேண்டுமென, எதிர்க்கட்சிகளே 3 மாதங்களாக போராடின - கம்மன்பில


சஜித் பிரேமதாசவுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்புமனு வழங்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் கடந்த மூன்று மாதங்களாக போராடி வந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று -27- நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும் அவர்,

சஜித் பிரேமதாச வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும் என ஏன் போராடினோம் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

இலகுவாக தோற்கடிக்க கூடிய வேட்பாளர் என்பதாலேயே அவரை நிறுத்துமாறு போராடினோம். சஜித் பிரேமதாச அம்பாந்தோட்டை மாவட்டத்தில் நாமல் ராஜபக்சவிடம் இரண்டு முறை தோல்வியடைந்த வேட்பாளர்.

திஸ்ஸமஹாராம தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி.சனக்கவிடம் தோல்வியடைந்த வேட்பாளர். அவர் வசித்து வரும் லுணுகம்வெஹர பிரதேச சபையில் ரசி தினேஷிடம் தோல்வியடைந்த வேட்பாளர்.

சஜித் அம்பாந்தோட்டை மாவட்ட தலைவராக 2001ஆம் ஆண்டு போட்டியிட்ட போது ஐக்கிய தேசியக் கட்சிக்கு 40வீத வாக்குகளே கிடைத்தன. அவரது தலைமையின் கீழ் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து வந்தது.

2001ஆம் அண்டு 40 வீதமாக இருந்த வாக்குகள், 2010ஆம் ஆண்டு 30 வீதமாக குறைந்தது. சஜித் தரத்தை அறிய மேலும் எதனையும் கூற வேண்டியதில்லை.

ரவி கருணாநாயக்க கூறுவது போல் சாதாரண தரத்தில் கூற தேர்ச்சி பெறாத தனது தொகுதியில் கூட வெல்ல முடியாத வேட்பாளர்.

சரத் பொன்சேகா கூறுவது போல் பெட்டி வீடுகளை கட்டுவது நாட்டை ஆள தகுதி என நினைக்கும் வேட்பாளர். சம்பிக்க ரணவக்க கூறுவது போல் குடும்ப சார்பு வேட்பாளர்.லக்ஷ்மன் கிரியெல்ல கூறுவது போல், சிறுபான்மை இனத்தவரை ஈர்க்க முடியாத வேட்பாளர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாம் அறிந்தவரையில் நோக்கும், வேலைத்திட்டங்களும் இல்லாத வெற்று வார்த்தைகள் மாத்திரம் இருக்கும் வேட்பாளர் எனவும் உதய கம்மன்பில, ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச பற்றி குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. உதய கம்மன்பில என்ற மாபெரிய கள்ளனை பக்கத்திலும் எடுக்க வேண்டாம் என சஜித்துக்கு யார் சொல்லுவார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.