Header Ads



சஜித் - TNA பேச்சு இணக்கப்பாடின்றி முடிவு

ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் விடயம் குறித்தும் தேர்தலுக்கான ஆதரவை பெறுவதற்காகவும் அமைச்சர் சஜித் பிரேமதாச தரப்பின் அமைச்சர்கள் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடத்திய பேச்சு வெற்றியளிக்கவில்லை.

கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் இல்லத்தில் நடந்த இந்த சந்திப்பில் சம்பந்தனுடன், சுமந்திரன் எம் பி கூட்டமைப்பின் சார்பில் கலந்து கொண்டார்.

அமைச்சர்கள் ராஜித , மலிக் , மங்கள ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

“ இனியும் நாங்கள் ஏமாறுவதற்கு தயாரில்லை. தமிழரின் தேசியப் பிரச்சினைக்கு தீர்வை தெளிவாக சொல்லுவோர் பற்றியே எங்களின் கவனம் இருக்கிறது. அது ரணிலோ சஜித்தோ என்பதை பற்றி எங்களுக்கு கவலையில்லை.ஏற்கனவே சஜித்துடன் நாங்கள் பேசினோம். ஆனால் தமிழர் பிரச்சினையில் அவரிடம் இருக்கும் தீர்வு என்ன என்பது தெளிவில்லை.தமிழருக்கு தீர்வை தரக்கூடிய எந்த தரப்புடனும் அடுத்தகட்ட பேச்சுக்கு நாம் தயார். அப்படியில்லாமல் நாங்கள் வெறுமனே பேசுவதில் அர்த்தமில்லை…” என்று இந்த சந்திப்பில் சம்பந்தன் எடுத்துக் கூறியதாக அறியமுடிந்தது.

இன்றைய இந்த சந்திப்பில் அமைச்சர் சஜித் கலந்து கொள்ளவில்லை.

சஜித்திற்கு கூட்டமைப்பின் ஆதரவு தேவையென்று அமைச்சர் மங்கள நீண்ட நேரம் வாதப் பிரதிவாதங்களை முன்வைத்த அதேசமயம் கூட்டமைப்பின் கோரிக்கையில் நியாயம் உள்ளதாக அமைச்சர் ராஜித குறிப்பிட்டதாக தகவல். tamilan

2 comments:

  1. Avanga ketta, Eelam Thane ketpaha. Nichayamaha kotthabaya pakkamo JVP pakkamo sayamattarhal konjam porunga sir madu padukkum.

    ReplyDelete
  2. ஒன்றும் வேண்டாம். கிழக்கில் வேகமாக வளர்ந்து வரும் ISIS யை யார் உடனடியாக அழிப்பதாக எழுத்து மூலம் உறுதியளிக்கும் வேட்பாளருக்கே 90% வாக்குக்கள் கிடைக்கும்.

    ReplyDelete

Powered by Blogger.