Header Ads



துருக்கி பயங்கரவாதிகளை, பாதுகாத்து வரும் றிசாத் - Sp திசாநாயக்கா குற்றச்சாட்டு

அமைச்சர் றிஷாட் பதியூதீன் துருக்கி பயங்கரவாதிகளை இலங்கைக்கு வரவழைத்து அவர்களை பாதுகாப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.

கொழும்பில் இன்று -19- நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மேலும் அவர்,

அமைச்சர் றிஷாட் பதியூதீனுக்கு எதிராக அரசாங்கம் சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். றிஷாட் பதியூதீனின் சகோதரரை கைது செய்யவும் சாட்சியங்கள் உள்ளன.

மோசடியாக கொள்வனவு செய்யப்பட்ட 6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் ஏக்கர் காணிகள் தொடர்பான 69 உறுதிப்பத்திரங்களை இலஞ்ச ஆணைக்குழுவுக்கும் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கும் வழங்கியுள்ளேன்.

சஹ்ரான் உட்பட அடிப்படைவாதிகளையும், துருக்கி பயங்கரவாதிகளையும் இலங்கை வரவழைத்து பாதுகாப்பு வழங்கி அவர்களிடம் நிதியையும் சிறப்புரிமைகளையும் பெற்றுக்கொண்டார். அதற்கான போதுமான சாட்சியங்கள் உள்ளன. இது குறித்து தூதுவருக்கும் வெளிவிவகார அமைச்சிடமும் முறைப்பாடு செய்துள்ளேன்.

சதோச வாகனங்கள் அடிப்படைவாதிகள் பயன்படுத்த வழங்கப்பட்ட சம்பந்தமான சாட்சியங்களும் சமர்பிக்கப்பட்டுள்ளன. எனினும், இந்த குற்றச்சாட்டுக்கள் அனைத்திலும் இருந்து றிஷாட் பதியூதீன் தப்பியுள்ளார்.

பொய்யான பெயர்களை வழங்கி சதோச நிறுவனத்தில் ஊதியம் பெற்றுக்கொள்கிறார். றிஸ்மி றிஷாட் என்ற ஆலோசகருக்கு 27 இலட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது.

மூன்று இடங்களில் 27 இலட்சம் ரூபாய் செலுத்தப்படுகிறது. பொலிஸாரின் உதவியும் றிஷாட்டுக்கு உள்ளது. பணத்தை கொடுத்து அவர்களை வாங்கியுள்ளார் எனவும் எஸ்.பி.திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

5 comments:

  1. அடுத்த முறை பின் கதவால் போக முடியாது என இப்போதே திரு.sp க்கு புரிந்து விட்டது.அதுதான் புலம்பல்

    ReplyDelete
  2. முத்திட்டு சனியனுக்கு முதல்ல இந்த SP கபோதிய சொறி நாய்கள விட்டு கடிக்கவிடனும்

    ReplyDelete
  3. PAWAM NATTAPPATRRY SHARIYANA KAWALAI. KONSHAM SHARI KALAWANDA VILLA.NALLA MANISHAN S.B.

    ReplyDelete
  4. அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்களே இவருடைய ஒரு குற்றச்சாட்டுக்கும் நீங்கள் எந்த விதமான பதிலும் அளிக்க வேண்டாம் அவரே அவரின் வாயை பொத்தி கொள்வார் நீங்கள் ஏதாவது சொன்னால் அதற்கு அவரும் இன்னும் சொல்ல இது நீண்டு கொண்டே போகும்.

    நீங்கள் அவருக்கோ மீடியாவுக்கு பதில் சொன்னால் அது அவருடைய பிரச்சாரத்திற்கு மிகவும் வலுசேர்க்கும் ஒரே வார்த்தையில் இதை போலீசாரிடமும், படைத்துறை இடமும் முறையைச் சொல்லுங்கள்.

    ReplyDelete
  5. எஸ் பீ சைத்தான் புலனாய்வுத்துறையில் பொலிஸ்காரன் தொழில் செய்ய பொருத்தமானவனா என்பது ஆய்வு செய்து அவன் அதற்குப் பொருத்தமாக இருந்தால் உடன் பாராளுமன்றத்திலிருந்து வௌியேற்றி உரிய தொழில்வழங்கப்படவேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.