Header Ads



வாக்காளர்களிடம் SLTJ யின் வேண்டுகோள்


இலங்கை தேர்தல் ஆணைக்குழுவினால் 2019ம் ஆண்டில் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ள வாக்காளர்களின் பெயர் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் வாக்காளர் இடாப்பில் உங்கள் பெயரும், உங்கள் குடும்பத்தினரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்!

வாக்காளர் படிவங்களை பூர்த்தி செய்து கிராம உத்தியோகத்தரிடம் ஒப்படைத்த பின்னர் அவைகள் பதிவு செய்யப்படுவதில் காலதாமதம் ஏற்படலாம் அல்லது தவறுகள் நிகழ்ந்து பதிவு செய்யப்படாமல் கூட போகலாம். இவ்வாரான சூழ்நிலைகளில் வாக்காளர் படிவங்களை பூர்த்தி செய்து ஒப்படைத்தும் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை நாம் இழந்து விடுகிறோம்.

தேர்தலில் வாக்களித்தல் என்பது ஜனநாயக நாட்டில் வாழும் ஒவ்வொரு குடிமகனினதும் அடிப்படை உரிமையாகும். அதனால் இது விடயத்தில் கவனமற்றிருக்காமல், வாக்காளர் பதிவேட்டை பரிசீலனை செய்து உங்கள் மற்றும் உங்கள் குடும்பத்தவர்களின் பெயர்கள் சரியாக இடம்பெற்றுள்ளதா என்று இன்றே உறுதி செய்து கொள்ளுங்கள்!

உங்கள் பிரதேச கிராம உத்தியோகத்தர், அல்லது பிரதேச செயலகம் மூலம் தேர்தல் இடாப்பில் உங்கள் மற்றும் உங்கள் குடும்ப அங்கத்தவர்களின் பெயர் சரியாக இடம்பெற்றுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளலாம். அல்லது ( www.elections.gov.lk ) என்ற இலங்கை தேர்தல் ஆனைக்குழுவின் இனையதளத்தினூடாக உறுதி செய்வதற்கான வசதியை தேர்தல்கள் ஆனைக்குழு செய்துள்ளது.

தேர்தல் இடாப்பை பரீட்சித்துப் பார்த்த பிறகு உங்கள் பெயர் அல்லது உங்கள் குடும்ப அங்கத்தவர்களின் பெயர் விபரங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டியிருந்தால் எதிர்வரும் 19ம் திகதிக்கு முன்னர் இலங்கை தேர்தல் ஆனைக்குழுவிற்கு தெரியப்படுத்தி அவற்றை நிவர்த்தி செய்வதற்கான ஏற்பாட்டினை செய்து கொள்ளுங்கள்.

No comments

Powered by Blogger.