Header Ads



சுதந்திரக் கட்சிக்குள், யுத்தம் ஆரம்பம் - பலர் பல்டி அடிக்கலாம்...!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஜனாதிபதி தலைமையில் நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் இந்த வாக்குவாதம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எடுக்கக் கூடிய சிறந்த முடிவு பொதுஜன பெரமுனவுடன் இணைவதே என ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூறியிருந்தார்.

கட்சியின் பொதுச் செயலாளரான தயாசிறி ஜயசேகர இதற்கு எதிராக கருத்து வெளியிட்டதால், இவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சியம்பலாப்பிட்டிய இவ்வாறான கருத்தை வெளியிட்டிருக்கக் கூடாது என தயாசிறி ஜயசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள சியம்பலாப்பிட்டிய, தான் எந்த சந்தர்ப்பத்திலும் தனது நிலைப்பாட்டை நேரடியாக கூறுவேன் என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தயாசிறி ஜயசேகர, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைக்க முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைய தேவையானவர்கள் இருந்தால், அவர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து விலகிச் சென்று அந்த தீர்மானத்தை எடுக்கலாம் என சியம்பலாப்பிட்டிய குறிப்பிட்டுள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிடைக்கும் நம்பகரமான தகவல்களின்படி பலர் ஐ.தே.க. பக்கம் கட்சி  தாவவுள்ளதாக அறிய வருகிறது.

No comments

Powered by Blogger.