Header Ads



கோத்தாபயவை வெற்றிகொள்ள முடியாதவர்களே, அவர்மீது பொய் குற்றங்களை சுமத்துகின்றனர்

கோத்தாபய ராஜபக்ஷவை வெற்றிகொள்ள முடியாதவர்களே அவர் மீது பொய்யான குற்றங்களை சுமத்தி மக்களை திசை திருப்ப முயற்சிக்கின்றனர்.

எனவே பொய்யான கருத்துக்களை ஆதரிக்காமல் கோத்தபாய ராஜபக்க்ஷ வெற்றி பெற நாட்டுமக்கள் ஒன்றிணைய வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

பத்தரமுல்லை -நெலும்  மாவத்தை பொதுஜன பெரமுன அலுவலத்தில் இன்று -30- இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெவித்தார். 

பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்க்ஷவை வெற்றிகொள்ள முடியாத காரணத்தினாலேயே, அவர் மீது பொய்க்குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகிறது,  தற்போது அவர் இரண்டு அடையாள அட்டைகளை வைத்திருப்பதாகவும் அதன் மூலம் பெறப்பட்ட கடவு சீட்டும் போலியானது என்றும் அவர் இன்னும் இலங்கை பிரஜா உரிமையை பெறவில்லை என்றும் ராஜித சேனாரத்ன குறிப்பிட்ட கருத்துக்கு கண்டணத்தை தெரிவித்தார்.

அத்தோடு அவரின் இலங்கை பிரஜா உரிமை தொடர்பான தகவல்களை தேர்தல் ஆணையகத்திடம் அவர் வழங்கி இருப்பதாகவும் அதற்கு தேர்தல்கள் ஆணையகமும் இணக்கம் தெரிவிப்பதாகவும் தெரிவித்த அவர் இரண்டு அடையாள அட்டை என்பது புதிய பழைய அட்டைகளின் இலக்கத்தில் மாற்றம் ஏற்படுத்தியதே இதற்கு காரணம் என்றும் புதிய அடையாள அட்டை இலக்கத்தை எழுதி அடைப்பிற்குள் தனது பழைய அடையாள அட்டை இலக்கத்தை எழுதுவதனால் இரண்டு அடையாள அட்டைகள் என்று கருத முடியாது.

பொய்யான கருத்துக்கள் தொடர்பில் ஆராய்வதற்கு சட்டம் இருப்பதாகவும் நாட்டு மக்களை குழப்பத்தில் ஆழ்த்த வேண்டாம் என்றும் அவர் இதன் போது குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.