Header Ads



ரணிலும் சஜித்தும் இணைந்து பயணித்தால், நிச்சயமாக வெற்றயடைய முடியும் - பாலித

கோத்தபாய ராஜபக்சவிற்கு சிங்கள பௌத்த வாக்குகள் மட்டுமே உண்டு என பிரதியமைச்சர் பாலித தெவரப்பெரும தெரிவித்துள்ளார்.

சிங்களப் பத்திரிகைக்கு அண்மையில் வழங்கியுள்ள நேர்காணலில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில்,

நாட்டை பற்றி சிந்திக்கும் நாட்டுக்கு சேவையாற்றக் கூடிய நாட்டை அபிவிருத்தி செய்யக்கூடிய ஒரு ஜனாதிபதியே நாட்டுக்குத் தேவை.

இந்த சகல தகுதிகளும் சஜித் பிரேமதாசவிடம் காணப்படுகின்றன. ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச அறிவிக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் சிறந்த தீர்மானம் எடுத்துள்ளார். பிரதமரும், சஜித் பிரேமதாசவும் இணைந்து பயணித்தால் நிச்சயமாக வெற்றி அடைய முடியும்.

ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களினால் நிராகரிக்கப்பட வேண்டிய தலைவர் கிடையாது. அவரும் சிறந்த தலைவராவார்.

பல தடவைகள் அவர் பிரதமராக பதவி வகித்துள்ளார். கோத்தபாயவிற்கு சிங்கள பௌத்த வாக்குகள் மட்டுமே காணப்படுகின்றன.

சஜித் பிரேமதாசவிற்கு சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் வாக்குகள் காணப்படுகின்றன.

இந்த சந்தர்ப்பத்தில் பிரதமரும் சஜித் பிரேமதாசவும் ஒருவரை ஒருவர் மதித்து ஒருவருக்கு ஒருவர் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும்.

இருவரினதும் செயற்பாடுகளை மக்கள் மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருகின்றனர் என சுட்டிக்காட்டியுள்ளார்.

2 comments:

  1. சஜித் பிரேமதாச ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி அபேட்சகராக தெரிவு செய்யப்பட்டதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் சிங்கள ஆதரவாளர்கள் வேண்டுமானால் கொண்டாடிக் குதூகலிக்கலாம்.
    ஆனால் முஸ்லிம்களாகிய நாங்கள் இப்போது கொண்டாடிக் குதூகலிக்க அப்படி என்னதான் நமக்கு சுபசோபனம் இறங்கிவிட்டது.

    ReplyDelete
  2. PALITHA T. P IS GOOD PERSON .....BUT ???

    ReplyDelete

Powered by Blogger.