Header Ads



இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் சேவைகள் - பிரமிப்பில் ஆழ்ந்த இந்திய முஸ்லிம் அரசியல்வாதிகள்


இலங்கை தலைநகர் கொழும்புவில் அமைந்துள்ள அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலாமாவின் தேசிய தலைமையகத்தில் அவ்வமைப்பின் தேசிய நிர்வாகிகளோடு இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன் அவர்களும், முதன்மை துணைத் தலைவர் அப்துல் ரஹ்மான், மனித நேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா, மாநில செயலாளர்கள் காயல் மகபூப், ஆடுதுறை ஷாஜஹான், குனங்குடி ஹனிபா மற்றும் முசப்பர் சந்தித்தனர்.

இலங்கையில் அந்த அமைப்பு ஆற்றிவரக்கூடிய மார்க்க பணிகள், சமூக மற்றும் சமய நல்லிணக்க பணிகள் பற்றி விவரிக்கப்பட்டது.  Aduthurai Shahjahan2

கொழும்புவில் அகில இலங்கை ஜமாத்துல் உலமா சபை தலைமையகத்திற்கு சென்று அதன் தலைவர் முஃப்தி எம் ஐ எம் ரிஜ்வி உள்ளிட்ட அதன் தலைமை நிர்வாகிகளை சந்தித்தோம். 4 மாடிகள் கொண்ட சொந்த கட்டடத்தில் இந்த உலமாக்களின் அமைப்பு செயல்படுகிறது.சுமார் 50 முழு நேர ஊழியர்கள் இதன் பல்வேறு துறைகளில் பணியாற்றுகிறார்கள். பிறை தொடர்பான வழிகாட்டல், மார்க்க தீர்ப்புகள் மட்டுமின்றி கல்வி வழிகாட்டல் இளைஞர்களுக்கு வழிகாட்டல் வெள்ளிக்கிழமை ஜூம்ஆ உரைக்கு வழிகாட்டல் என பல்வேறு துறைகளில் இந்த உலமாக்கள் அமைப்பு தனது முத்திரையை பதிந்து வருகிறது. இது மட்டுமல்லாது முஸ்லிமல்லாதார்களுடன் சீர்மிகு உறவுகளை மேம்படுத்த தனி கவனம் செலுத்துகிறது.

உலமா சபையின் செயல்பாடுகள் குறித்த பவர் பாயிண்ட் ஆவண காட்சி எங்களை பிரமிக்க வைத்தது. அவர்களது நற்பணிகள் மேலும் வலுபெற இறைவனை பிரார்த்திப்போம்.
எனது விடுதலைப் பெரும் போரில் வீரமிகு உலமாக்கள் நூலை உலமா சபை தலைவர்களுக்கு அளித்தேன்

Jawahirullah

No comments

Powered by Blogger.