Header Ads



தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் பாதாள, குழுக்கள் கப்பம் பெறும் நடவடிக்கை ஆரம்பம்

ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டதனை தொடர்ந்து கொழும்பு நகரை கேந்திரமாக கொண்டு பாதாள உலக குழுக்கள் கப்பம் பெறும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.

இதனால் மக்கள் மற்றும் வர்த்தகர்கள் பீதியடைந்திருப்பதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

கடுவெல, ஹங்வெல்ல, அத்துருகிரிய உட்பட கொழும்பில் உள்ள வர்த்தகர்கள் 50 ஆயிரம் ரூபாயிலிருந்து 70 இலட்சம் ரூபாய் வரை கப்பமாக பணம் வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

அங்கொட லொக்கா, ஊரு ஜுவா, கஞ்சிபான இம்ரான், மாகந்துரே மதுஷ் ஆகியோர் சிறைச்சாலையில் இருந்து இந்த கப்பம் பெறும் நடவடிக்கை மேற்கொள்வதாக தெரியவந்துள்ளது.

பாதாள உலக குழு உறுப்பினர்கள் வர்த்தகர்கள் மற்றும் வசதியானவர்களை தொடர்பு கொண்டு, சிறையில் இருக்கும் தங்கள் உறுப்பினர்களை விடுவிப்பதற்கு கப்பமாக பணம் பெற ஆரம்பித்துள்ளனர்.

பொலிஸாரிடம் அறிவித்தால் கொலை செய்வதாகவும், பிள்ளைகளை கடத்தி செல்வதாகவும், அச்சுறுத்தி இந்த கப்பம் பணத்தை பெறுவதாக தெரிவந்துள்ளது. இவர்களுக்கு அச்சமடைந்து அமைதியாக கப்பம் பணத்தை வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

பொலிஸார் தொடர்பில் உள்ள நம்பிக்கை இல்லாமல் போயுள்ளமையினால் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு இது தொடர்பில் தகவல் வழங்கப்படுவதாக குறித்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.