Header Ads



நாட்டிற்கு தற்போது தேவை, நடைமுறையான பௌத்தமே ஆகும் - சஜித்

நடைமுறையான பௌத்த தர்மமே நாட்டிற்கு தற்போது தேவையாக உள்ளதாக வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மாத்தறை, கம்புருபிட்டி பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு அமைச்சர் இதனை தெரிவித்தார். 

கடந்த அரசாங்க காலத்தில் வடமேல் மாகாணத்தில் 500 க்கும் அதிகமான விகாரைகள் மூடப்பட்டதாக வௌியான செய்தி குறித்து தான் பாராளுமன்றில் விசாரித்து குறித்த விகாரைகளை கட்டியெழுப்புவதற்காக, பயிர்ச் செய்கை நிலங்களை வழங்க பரிந்துரைத்த போது, அவ்வாறு விகாரைகளுக்காக வழங்க காணிகள் இல்லை என அப்போது இருந்த புத்த சாசன அமைச்சர் தெரிவித்தாக அமைச்சர் குறிப்பிட்டார். 

பௌத்தம் குறித்து நிகழ்காலத்தில் பேசுவபர்களே கடந்த காலத்தில் அவ்வாறான பதிலை வழங்கியதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். 

நாட்டினுள் நடைமுறையான பௌத்த தர்மமே தற்போது தேவையாக உள்ளதாகவும், அரசியல் நோக்கங்களுக்கான பௌத்த தர்மம் நாட்டிற்கு பலனில்லை எனவும் அமைச்சர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.

2 comments:

  1. அப்போ முதல்ல பிக் குமாருக்கு நல்லொழுக்கத்தை கற்றுக்கொடுக்க வேண்டும் அடுத்ததாக நாட்டிலுள்ள கருப்பு நிற வெள்ளை வினாவிற்கு அத்தனை பார்களையும் மூடிவிடவேண்டும் சூதாட்ட தலங்களை மூடிவிடவேண்டும் வங்கிகளை மூடிவிடவேண்டும்

    ReplyDelete
  2. அப்போ முதல்ல பிக் குமாருக்கு நல்லொழுக்கத்தை கற்றுக்கொடுக்க வேண்டும் அடுத்ததாக நாட்டிலுள்ள அத்தனை பார்களையும் மூடிவிடவேண்டும் சூதாட்ட தலங்களை மூடிவிடவேண்டும் வங்கிகளை மூடிவிடவேண்டும்

    ReplyDelete

Powered by Blogger.