Header Ads



கிரிந்தவில் ஏற்பட்ட பதற்றத்திற்கு, கோத்தபாயவின் அடிவருடிகளே காரணம் - மங்கள

கோத்தபாய ராஜபக்சவின் அடிவருடிகள் மீண்டும் இன கலவரத்தை ஏற்படுத்தி இம்முறை தேர்தலில் அரசியல் இலாபம் பெற முயற்சிப்பதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

மாத்தறை, கிரிந்த, பூஹூல்வெல்ல பிரதேசத்தில் நேற்று -27- மாலை ஏற்பட்ட பதற்றமான நிலைமை தொடர்பாக கருத்து வெளியிடும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவு செய்யப்பட்டமை குறித்து ஊடகங்களில் செய்திகள் வெளியானதை அடுத்து, பிரதேச இளைஞர்கள் பட்டாசு கொளுத்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

குறித்த பிரதேசத்தின் பிரதேசசபை தலைவரின் ஆதரவாளர் ஒருவர் பட்டாசு கொளுத்திய முஸ்லிம் இளைஞர் ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனையடுத்து நடந்த சில சம்பவங்களால் பூஹூல்வெல்ல பிரதேசத்தில் நேற்று பதற்றம் ஏற்பட்டுள்ளது. நிலைமை தற்போது முற்றாக வழமைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரதேசத்தின் பாதுகாப்பு பணிகளில் விசேட அதிரடிப்படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் எம்.ஆர்.லத்தீப் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் மங்கள சமரவீர,

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாத்தறை மாவட்ட தலைவரே இவ்வாறான பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். சம்பவத்துடன் தொடர்புடையவர் நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்ச விஜேசேகரவின் சகா.

சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் உடனடியாக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்தேன். இதனையடுத்து பாதுகாப்பு தரப்பினர் தலையிட்டு பதற்றத்தை தணித்துள்ளனர்.

ராஜபக்சவினருக்கு ஆதரவான சமூக வலைத்தள பக்கங்கள் மிகவும் அருவருப்புடன் நடந்து கொண்டதுடன் இந்த சம்பவத்தின் ஊடாக நாட்டை தீயிட முயற்சித்தனர்.

இந்த சம்பவத்தின் பின்னணியில் பொதுஜன பெரமுனவினர் இருக்கின்றனர் என்பதை நான் தெளிவாக கூறுகிறேன்.

கோத்தபாய இம்முறையும் இனவாதத்தை தூண்ட முயற்சித்து வருகிறார். நாங்கள் அதற்கு இடமளிக்க மாட்டோம் என குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. We Muslims must be very cautious during these volatile and inflammable election hours and to be on safe side betterms to support a third force openly.

    ReplyDelete

Powered by Blogger.