Header Ads



பிறரை வாழவைப்போம், பிறர் கண்ணீர் துடைப்போம், அதுவே நாம் வாழ்ந்ததற்கான அடையாளம் - முப்தி யூஸுப் ஹனிபா

அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹ்வுடைய தூய்மையான மார்க்கத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை அவன் தன்வசமே வைத்துக்கொண்டுள்ளான் என்பது திருமறை பகிரும் சான்று. 

போகக்கூடிய இடங்களில் எல்லாம் அகதிகளாக, உயர்கல்விக்காக, தொழில்சார் நடவடிக்கைகளுக்காக புலம்பெயர்ந்து வாழக்கூடிய அன்பு இஸ்லாமியச் சகோதர்கள் படைக்கும் சாதனைகளை பார்க்கும் போதெல்லாம்  ஆச்சரியமாக இருக்கிறது.

தத்தமது தாய்நாட்டில் இவர்களுமா என்ற பார்க்கப்பட்டவரகள், புலம்பெயர்ந்து வாழக்கூடிய நாடுகளில் நிமிர்ந்து பார்க்கப்படுபவர்களாகவும் சாதனையாளர்களாகவும் இருக்கின்றார்கள்.

2019 செப்டம்பர்  13 மற்றும் 14 ஆம் திகதிகளில் தென்கொரியாவில் வாழும் என் தாய் நாட்டுச் சகோதரர்களின் அழைப்பின் நிமிர்த்தம் அங்கு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்தது.

கடல் கடந்து தொழில் சார் நடவடிக்கைகளுக்காக இங்கு வந்தவர்கள்,  இலங்கை மண்ணுக்கு வந்த எம்முடைய மூதாதையரைப் போன்று உழைக்கும் மண்ணில் இறைஇல்லம் ஒன்றிற்காக நான்கு  மாடிக் கட்டிடம் ஒன்றை சுமார் எட்டு கோடி ரூபாவுக்கு சொந்தமாக கொள்வனவு செய்து – (இன்ஷாஅல்லாஹ்) அழிக்கவும்  மறைக்கவும் முடியாதவாறு வரலாறு படைத்து விட்டனர்.  

நல்ல விடயங்களைச் செய்வதற்கு செய்வதற்கு இறையருள் மட்டுமே போதுமானது என்பதையே இது உணர்த்தி நிற்கின்றது. 

செல்வாக்குடையவர்கள், செல்வச் செழிப்புடையவர்கள், அறிவாளிகள் என்று பலரும் எம்மிடம் இருக்கலாம் ஆனாலும் அல்லாஹ்வும், அவனுடைய தூய்மையான மார்க்கமும், நம்மை விட்டும், நம்முடைய திறமைகளைவிட்டும் தேவையற்றது, என்பதையே இது எங்களுக்கு சொல்லித் தருகின்றது. 

தென்கொரியாவில் மட்டும் அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்ட 17க்கும் மேற்பட்ட ஜாமிஆ மஸ்ஜித்கள் உள்ளது. ஹலால் சான்றிதழுடனான  கடைகளும், உணவகங்களும் ஏராளம் இருக்கின்றன.

எங்களுடைய தாய்நாட்டில் தொழில் வாய்ப்புகளை எதிர்பாராது நிற்கக்கூடிய இளம் தலைமுறைக்கு முறையானதும் உத்தரவாதத்துடனானுமான பல வாய்ப்புகள் அங்கு காத்திருக்கிறன்றன.

அங்கே உள்ள நல்உள்ளம் படைத்த அன்புச் சகோதர நண்பர்கள் உங்களுக்கு தேவையான உதவிகளை செய்யது வரவேற்கக் காத்திருக்கிறார்கள். 

இறைவன் நம்மனைவரையும் இப்பூஉலகில் பிறரைவாழவைத்து, பிறர் கண்ணீர் துடைத்து, நாம் இங்கு வாழ்ந்தோம் என்பதற்கான அடையாளத்தை வைத்துவிட்டு இறை பொருத்தத்துடன் வாழ்வை முடித்துக்கொள்வதற்கான  இறையருள் நம்மனைவருக்கும் கிட்டட்டும்.

No comments

Powered by Blogger.