Header Ads



இலங்கையில்தான்,, உலக முஸ்லிம்களின் அடையாளம் உள்ளது - முசாபா


இலங்கைக்கு கடந்த 3 நாற்களாக தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டு வருகை தந்திருந்த தமிழ் நாடு   எம்.எல்.ஏ க்கள் மற்றும் இந்திய நாடாளுமன்ற உறுப்பிணா்கள் இந்திய முஸ்லிம் லீக் யுணியன் தலைவா் பேராசிரியா் கே.எம். காதா் மொகீதீன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பிணா் நவாஸ் கனி, ஈ.ரீ. மொகமட் பசீா் , முன்னாள் தலைவா் அ.க அப்துல் சமதின் புதல்வி பாத்திமா முசாபா் ஆகியோறுடன் 25 இலக்கியவாதிகள் அரசியல் கட்சி உறுப்பிணா்களும் வருகை தந்திருந்தனா்.

இந் நிகழ்வினை ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் இலங்கை இந்திய நட்புரவு மற்றும் ஜக்கியம் எனும் தலைப்பில் ஏற்பாடு செய்திருந்தது. மீடியா போரத்தின் தலைவா் தலைமையுரை நிகழ்தினாா்.  பிரதம அதிதியாக கலந்து கொண்ட சுகாதார அமைச்சா் டாக்டா் ராஜித்த சேனாரத்தினா கலந்து கொண்டு உரையாற்றினா்  அத்துடன் இந்திய முஸ்லிம் லீக தலைவா் பேராசிரியரை பொன்னாடை போற்றி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தா்ா. அத்துடன் அமைச்சா் மனோ கனேசன், றிசாத் பதியுத்தீன், இராஜாங்க அமைச்சா் பைசால்காசீம், அமீா் அலி . பிரதியமைச்சா் அப்துல்லா மக்ருப் மற்றும் பாராளுமன்ற உறுப்பிணா்களான முஜிபு ரகுமான், எச்.எம் கரீஸ் ஆகியோா் இந்திய அரசியல் தலைவா்கள் இலக்கியவாதிகளை கௌரவித்தனா்.

இங்கு உரையாற்றிய அ.க. அப்துல் சமதின் மகள் பாத்திமா முசாபா் - 

இந்தியாவை விட இலங்கையில் தான் உலக முஸ்லிம் களின் அடையாளம் உள்ளது. முதல் நபி ஆதம் அலை அவா்களின் பாதம் பதிக்கப்பட்டது இலங்கையில் தான் எனக் கூறினாா். அன்மையில் இலங்கையில் நடைபெற்ற சம்பவம் இந்தியாவில் வாழும் முஸ்லிம்களினை வெகுவாகப் பாதித்தது. அதற்காக நாமும் கவலையடைந்தோம். பிராத்தனையில் ஈடுபட்டோம். ஒரு பிரச்சினை ஏற்படும் போது தான் அங்கு ஒரு எழுச்சியும் தாக்கமும் அந்தப் பகுதியில் வாழும் முஸ்லிம்களை ஈ்க்கின்றது. முழு உலகமும் இந்த சம்பவத்தினால் இலஙகை வாழும்  முஸ்லிம்களது கவணம் செலுத்தப்பட்டது. ஒரு வீழ்சி நடைபெறுகின்றதென்றால் ்அது  உயா்ச்சிக்குத்தான் அதுதான் நியதி எனக் கூறினாா்.  

அஸ்ரப் ஏ சமத்


No comments

Powered by Blogger.