Header Ads



இலங்கைக்கு வந்த வந்த பலஸ்தீனர், நாடு கடத்தப்பட்டார்

இலங்கைக்கு வந்த வெளிநாட்டவர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நாடு கடத்தப்பட்டுள்ளார்.

சுற்றுலா விசா மூலம் இலங்கைக்கு வந்த பலஸ்தீன பிரஜை ஒருவர், நேற்று முன்தினம் கட்டுநாயக்க விமான நிலையத்திலுள்ள குடிவரவு குடியகல் திணைக்கள அதிகாரிகளால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.

45 வயதான பலஸ்தீன நாட்டவரான அவர் நேற்று முன்தினம் அதிகாலை 12.30 மணியளவில் மலேசியாவில் இருந்து மலிந்தோ விமான சேவையின் OD-185 ரக விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகைத்தந்தார்.

இலங்கை வந்தமைக்கான காரணம் தொடர்பில் குறித்த நபரிடம் விமான நிலைய அதிகாரிகள் வினவிய போது, 3 மாதங்கள் இலங்கையில் தங்கியிருக்க எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் அதற்கு போதுமான பணம் மற்றும் உரிய சுற்றுலா திட்டம் ஒன்று அவரிடம் இல்லை என தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணையின் போது இலங்கையில் தங்கியிருந்து வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வதே அவரது பிரதான நோக்கம் என தெரியவந்துள்ளது.

அத்துடன் அவரது பயணப்பையை சோதனையிட்ட போது நாட்டில் இருந்து திரும்பி செல்வதற்கு அவரிடம் டிக்கட் இல்லை என தெரியவந்தமையினால் அவர் வந்த விமானத்திலேயே மலேசியாவுக்கு திருப்பி அனுப்புவதற்கு குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.