Header Ads



காலை பிடித்துக் கேட்கிறேன், சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குங்கள் -சுஜீவ சேனசிங்க,

பிரதமர் ரணில் ஜனாதிபதி வேட்பாளராக ​வேண்டுமென்றால் கட்சிக்குள் வாக்கெடுப்பு நடத்த வேண்டுமெனத் தெரிவித்துள்ள அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் சுஜீவ சேனசிங்க, அவ்வாறு வாக்கெடுப்பு நடத்தினாலும் அமைச்சர் சஜித்தே வெற்றிபெருவார் எனவும் தெரிவித்துள்ளார்.

சுகததாச உள்ளக அரங்கில் தற்போது நடைபெற்றுவரும் ஐ.தே.க உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர்,  “பிரதமர் ரணிலுடன் நீண்ட நாள்கள் பணியாற்றியிருக்கோம். அவரை ஒருபோதும் கைவிட்டதில்லை. காலை பிடித்துக் கேட்கிறேன் சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குங்கள். ஐ.தே.கவின் எதிர்காலம் உங்களின் கரங்களில் இருக்கிறது” எனவும் தெரிவித்தார்.

“ராஜபக்ஷக்களுக்கு ஆதரவளிக்கும் ஊடகப்பேய்கள் ஐ.தே.கவை பிளவுப்படுத்த போலியான செய்திகளை வௌியிட்டு வருகின்றன. சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக்க களமிறக்குவது தொடர்பில் ஆராய்வதற்கு ஐ.தே.கவின் தலைவர் பிரதமர் ரணில் இணக்கம் தெரிவித்துள்ளார்” எனவும் கூறினார்.

“ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க களமிறங்க வேண்டுமானால், அதனை அறிவித்து, கட்சிக்குள் வாக்கெடுப்பு நடத்தி வேட்பாளரை தீர்மானிக்க வெண்டும். அவ்வாறு வாக்கெடுப்பு நடத்தினாலும் சஜித்தே வெற்றிபெறுவார்” என்றார்.

“அமைச்சர் சஜித் ஜனாதிபதியாக இதுவே சிறந்த தருணம். சிங்கப்பூருக்கு இணையான நாடாக இலங்கையை கட்டியெழுப்ப அவரால் முடியும். சஜித் ஜனாதிபதியாவார். அவரது ஆட்சியில் எந்தவொரு ஆளுங்கட்சி உறுப்பினர்களும் ஊழல் ​மோசடிகளில் ஈடுபட இடமளிக்கமாட்டார்” என்றார்.

No comments

Powered by Blogger.