Header Ads



குண்டை கட் டிக்கொண்டு பாய்வேன் - பாராளுமன்றத்தில் நிமல் லான்ஸா மிரட்டல்

பயங்கரவாதிகளை பாதுகாக்க நாங்கள் ஒருபோதும் செயற்படவில்லை.  யாரிடமிருந்தும் பணம்பெறவும் இல்லை. அவ்வாறு பெற்றுக்கொண்டதை ஒப்புவித்தால் பதவி விலகவும் தயாராக இருக்கின்றேன்.

அத்துடன் நீர்கொழும்பு மக்களுக்கு போதையை விநியோகித்தவர் போதையுடனே பாராளுமன்றத்துக்கும் வந்திருக்கின்றார் என ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் ஆஷு மாரசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் ஏற்றுமதியாளர்களை பதிவுசெய்வதற்கான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் பாராளுமன்ற தெரிவுக்குழு தொடர்பில் எதிர்க்கட்சி உறுப்பினர் நிமல் லான்ஸா பொய் குற்றச்சாட்டுக்களை தெரிவித்தார். பயங்கரவாதிகளை பாதுகாக்கவும் அதற்கு பணம் பெற்றுக்கொள்வதாகவும் தெரிவித்தார். அதேபோன்று மிகவும் மோசமான வார்த்தை பிரயோகங்களை இந்தசபையில் தெரிவித்தார்.

நிமல் லான்ஸா எம்.பி. தெரிவித்த மோசமான வார்த்தை பிரயோகத்தை ஹன்சாட்டில் இருந்து நீக்குமாறு தெரிவித்தபோது, அவர் கோபப்பட்டு என்னை கொலைசெய்வதற்கு குண்டை கட்டிக்கொண்டு பாய்வதாக தெரிவித்தார். 

அவரின் இந்த செயற்பாடு மிகவும் பயங்கரமானதாகும். பாராளுமன்றத்தில் முறையாக செயற்பட தெரியாதவர்களை பாராளுமன்றத்துக்கு தெரிவுசெய்து அனுப்பவேண்டாம் என்றே நாங்கள் மக்களை கேட்கின்றோம் என அவர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.