Header Ads



மொஹமட் பைஸாலின் கை, இயந்திரத்தில் அகப்பட்ட சோகம் - தீயணைப்பு படை உதவ வெற்றிகர சத்திரசிகிச்சை

அரைக்கும் இயந்திரத்தில் இருந்து கையை வெளியே எடுப்பதுதான் எம்முடைய பெரும் பிரச்சினையாக இருந்தது. இவ்வாறு தடித்த இரும்பை வெட்டக்கூடிய உபகரணங்கள் சத்திரசிகிச்சை கூடத்தில் இல்லை. இவ்வாறான இரும்பை வெட்டும் இயந்திரம் ஒன்று கண்டி தீயணைப்பு பிரிவினரிடம் இருக்கலாமென விசேட வைத்திய நிபுணர் துமிந்த ஹேரத் கூறியதற்கமைய நாம் அவர்களுடன் கதைத்தோம். அவர்கள் உடனடியாக செயற்பட்டு அதிகாரியொருவருடன் குறிப்பிட்ட உபகரணத்தை வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்தார்கள்.

வடை விற்பனை மூலம் தனது வாழ்க்கையை நடத்திய அக்குறனையை சேர்ந்த தெலம்புகஹா வத்தையில் வசித்த 39வயதான மொஹமட் பைஸால் அந்தப் புதன்கிழமை காலையில் வழமை போல் தனது வேலையில் ஈடுபட்டு எவ்வளவாவது சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே நாளை ஆரம்பித்தார்.  

பலவருடங்களாக வடை தயாரிப்பில் அனுபவம் பெற்றிருந்த அவர், தனது நாளை வடை தயாரிப்புக்கு தேவையான பருப்பை அரைப்பதற்கான இயந்திரத்தை சுத்தம் செய்தே ஆரம்பிப்பார். இயந்திரத்திற்குள்ளே தேங்காய்ப் பூவை இட்டு துடைப்பதே அவரது முதலாவது பணியாகும்.  

இயந்திரம் செயல்படும் போதே தேங்காய்ப் பூவை இட்டு உள்ளே கண்ணை மூடிக்கொண்டு அதனை துடைப்பதற்கு பைஸல் கெட்டிக்காரர்.   அதற்கு காரணம் அவர் பல வருடங்களாக அச்செயலை செய்வதன் மூலம் பெற்ற அனுபவம் ஆகும். அன்றும் அவ்வாறே பைஸல் தனது வேலையை செய்தார்.  

ஆனால் அன்று எதிர்பாராத சம்பவமொன்று நிகழ்ந்தது. ஏனைய நாட்களில் பருப்பை துண்டு                                    துண்டாக அரைக்கும் இயந்திரம் இன்று பைஸலின் கை விரல்களை அரைக்க தொடங்கியது. நடப்பது என்னவென்று அவருக்கே தெரியவில்லை. இடது கையின் விரல்களுடன் உள்ளங்கையின் ஒரு பகுதியும் அரைபடும் போது பைஸலுக்கு செய்ய முடிந்த ஒன்று இயந்திரத்தின் மின்னிணைப்பை துண்டிப்பதாகும். மின் துண்டிக்கப்பட்டு இயந்திரம் செயலிழக்கச் செய்யப்பட்டபோது பைஸலின் கை மணிக்கட்டின் கீழ் பகுதி முற்றாக இயந்திரத்திற்குள்ளே சிக்கியதனால் அவரது குடும்பத்தார் என்ன செய்வதென்று அறியாமல் கதறத்தொடங்கினார்கள். அவர்களின் குரலுக்கு அருகில் உள்ளவர்கள் என்ன நடந்துள்ளது என அறிய அவரது வீட்டுக்கு வந்தார்கள்.  

அவர்கள் கண்ட காட்சி அவர்களை திகைக்கச்செய்தது. என்ன செய்வதென்று எண்ணத் தொடங்கினார்கள். ஒரு நொடியில் சிலர் இணைந்து இயந்திரத்தில் சிக்கியுள்ள கையின் பகுதியை இயந்திரத்தில் இருந்து அகற்றினார்கள். உடனே பைஸாலின் குடும்பத்தார் அவரை கண்டி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள்.  

திடீர் விபத்தில் சிக்கிய பைஸால் கண்டி போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அனுமதிக்கப்பட்டார். விசேட வைத்திய நிபுணர் துமிந்த ஹேரத் பைஸலின் கைவிரல்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்து உடனடியாக அவ் வைத்தியசாலையின் பிளாஸ்டிக் சத்திர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றினார்.  

அங்கு சத்திரசிகிச்சைக்கு தேவையான ஆயத்தங்கள் நடைபெற்றபோதும் வைத்தியர்கள் முகம்கொடுத்த முக்கிய சவால் காயப்பட்டவரின் கையை இயந்திரத்தில் இருந்து வெளியே எடுப்பதாகும். இங்கு சிக்கியுள்ள அவரது விரல்களை வெளியே எடுக்க வேண்டும் என்றால் இயந்திரத்தின் பகுதிகளை துண்டு துண்டாக வெட்டுவதை தவிர வேறு வழி இருக்கவில்லை.  

“அரைக்கும் இயந்திரத்தில் இருந்து கையை வெளியே எடுப்பதுதான் எம்முடைய பெரும் பிரச்சினையாக இருந்தது. இவ்வாறு தடித்த இரும்பை வெட்டக்கூடிய உபகரணங்கள் சத்திரசிகிச்சை கூடத்தில் இல்லை. இவ்வாறான இரும்பை வெட்டும் இயந்திரம் ஒன்று கண்டி தீயணைப்பு பிரிவினரிடம் இருக்கலாமென விசேட வைத்திய நிபுணர் துமிந்த ஹேரத் கூறியதற்கமைய நாம் அவர்களுடன் கதைத்தோம். அவர்கள் உடனடியாக செயற்பட்டு அதிகாரியொருவருடன் குறிப்பிட்ட உபகரணத்தை வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்தார்கள். முதலில் நோயாளியை முற்றாக நினைவிழக்கச்செய்தோம். அதன் பின்னர் தான் கை இறுகி இருந்த இயந்திரத்தை துண்டுகளாக வெட்டினோம். இயந்திரத்தை வெட்டுவதற்கு ஒரு மணித்தியாலம் எடுத்தது”.  

 சத்திரசிகிச்சை செய்ய தலைமை வகித்த பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை தொடர்பான வைத்திய நிபுணர் அமில சஷங்க ரத்னாயக்க கருத்துக் கூறினார்.  

இயந்திரத்தில் இருந்த வெளியே எடுத்த காயப்பட்டவரின் இடது கையின் பெருவிரலைத் தவிர ஏனையவிரல்கள் பெருமளவு பாதிக்கப்பட்டிருந்தது. நடு விரலும் மோதிர விரலும் நான்கு இடங்களிலும் ஆள்காட்டி விரலும் சுண்டு விரலும் இரண்டு இடங்களிலும் உடைந்து மோசமாக நைந்து காணப்பட்டால் அதனை பழைய நிலமைக்கு கொண்டுவர வைத்தியர்கள் பெரும் சவாலுக்கு உள்ளானார்கள்.  

காயம் பட்டவரின் அதிர்ஷ்டம் அவரின் கையில் உள்ள இரத்தக் குழாய்களுக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டிருக்கவில்லை. முதலில் நாம் கையை நன்றாக துப்பரவு செய்தோம் பின்னர் கம்பி மூலம் உடைந்த விரல்களை இணைத்தோம். கம்பி மூலம் இணைத்து சிகிச்சை அளித்தவுடன் அவரின் இரத்த ஒட்டம் சாதாரணமாக நடைபெற தொடங்கியது. அதனால் நாம் பயப்பட வேண்டிய தேவை இருக்கவில்லை. உண்மையில் இந்த சத்திரசிகிச்சையின் வெற்றிக்கு நோயாளியை வைத்தியசாலைக்கு கொண்டுவந்த விதமே பெரும் உதவியாக இருந்தது.  

அநேகமானோர் செய்வது இவ்வாறு இயந்திரத்தில் காயப்பட்டுக் கொண்டால் அதை கழற்ற முயற்சிப்பதாகும். இயந்திரம் சுற்றும் பகுதிக்கு எதிர்ப்பக்கம் சுழற்றி கையை வெளியே எடுக்க முயற்சிப்பார்கள். அவ்வாறு செய்தால் கையில் உள்ள இரத்தக்குழாய்கள் மறுபுறம் சுழன்று அவற்றிக்கு பாதிப்பு ஏற்படும். அவ்வாறு எதுவும் செய்யாமல் இயந்திரத்துடனே காயப்பட்டவரை கண்டி வைத்தியசாலைக்கு கொண்டுவந்ததால் அவரின் கைவிரல்களை காப்பாற்ற முடிந்தது. இரத்த குழாய்கள் பாதிக்கப்பட்டிருந்தால் எம்மால் அந்த சத்திரசிகிச்சையை கண்டியில் செய்திருக்க முடியாது. அவ்வாறான வேளையில் எமக்கு நுண்ணிய சத்திரசிகிச்சையை செய்யக்கூடிய ஒபரேட்டிங் மைக்கிரோ ஸ்கொப் தேவைப்படும். அவ்வாறான ஒரு வசதி எம்மிடமில்லாததால் நோயாளியை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டிய நிைலமை ஏற்பட்டிருக்கும். இவ்வாறான உபகரணமொன்றை கண்டி வைத்தியசாலைக்கு பெற்றுக்கொள்ள பணிப்பாளர்தற்போது கேள்வி மனுவொன்றை சமர்பித்துள்ளார்.” என விசேட வைத்திய நிபுணர் டொக்டர் ரத்னாயக்க தெரிவித்தார்.  

பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை நிபுணர் டொக்டர் சஷங்க ரத்னாயக்க தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இச் சத்திரசிகிச்சைக்கு 6மணி நேரம் தேவைப்பட்டது. சத்திரசிகிச்சை அளிக்கப்பட்டபோது காயப்பட்டவரின் விரல்களுக்கு முந்நூறு தையல்கள் வரை வைத்தியர்களால் போடப்பட்டுள்ளது. இதற்காக மயக்கமருந்து அளிக்க விசேட வைத்தியர்களான பவித்திர நவரட்ன, சுரஜித் அபேரத்ன, ரோஹித்த குணரத்ன ஆகியோரும் தாதியர்களும் ஏனைய பணியாளர்களும் பெரும் பங்களிப்பை வழங்கியிருந்தார்கள்.  

விபத்தினால் உடற்பாகங்களுக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டால் 6மணித்தியாலத்துக்கு அதற்கான சிகிச்சையை ஆரம்பிக்க வேண்டும். அதனால் நோயாளியை முடிந்தவரை விரைவில் வசதிகளுடன் கூடிய வைத்தியசாலையில் அனுமதிப்பது முக்கியமென விசேட வைத்திய நிபுணர் ரத்நாயக்க கூறினார் உடம்பின் பகுதி நேரான சந்தர்ப்பங்களில் அந்த பகுதியை பாதுகாப்பாக பொலிதீன் பையொன்றினுள் இட்டு ஐஸ் கட்டிகள் இட்டு ஒரு பாத்திரத்தில் கொண்டு வருவதன் மூலம் வேறான அவயங்களை மீண்டும் இணைப்பதற்கு அதிக சந்தப்பம் கிடைக்கும்மெனத் தெரிவித்தார்.  

கண்டி போதனா வைத்தியசாலையில் அதி நவீன வசதிகளுடன் கூடிய திறமைவாய்ந்த வைத்திய குழுவினர் மற்றும் அனுபவம் சரியான பயிற்சியுள்ள தாதியர்களும் உள்ளதாகவும் அவர்களின் அற்பணிப்பினால் இந்த சத்திரசிகிச்சை மூலம் பாதிப்புக்குள்ளான நபரின் கைவிரல்கள் அணைத்தையும் காப்பாற்ற முடிந்ததாக வைத்தியசாலை பணிப்பாளர் டொக்டர் சமன் ரத்நாயக்க தெரிவித்தார்.  

எவ்வாறாயினும் தனது கவனயீனத்தால் ஒரு நொடியின் அரைக்கும் இயந்திரத்தில் அகப்பட்டு நிரந்திரமாக இல்லாமல் போகவிருந்த கைக்கு உயிர் கொடுத்த கண்டி பொதுவைத்தியசாலை வைத்தியர்களின் திறமையை பாராட்டியே தீரவேண்டும். 

அசேல குருலுவன்ச  - தமிழில் வி ஆர் வயலட்

7 comments:

  1. We wholeheartedly appreciate the commitment and devotion of our doctors, medical staff, para medical team for all these highly respected officials, we pray for their efforts and commitment, May Allah shower His choicest blessings for all those who have committed to serve this innocent man.

    ReplyDelete
  2. Doctors tireless endeavour..we salute srilankan doctors

    ReplyDelete
  3. The patient was taken to Akurana Zia Hospital, they did a great job with First Aid and to send him on-time in ambulance

    ReplyDelete

Powered by Blogger.