Header Ads



"முஸ்லிம்களின் வாக்குகளுக்கு மரியாதை இல்லை, முஸ்லிம் இளைஞர்கள் உசுப்பேத்ததப்படுகிறார்கள்"


அஷ்ரப்பின் மறைவிற்கு பின் முஸ்லிம்களின் அரசியல் நிலைமை மிக மோசமாக வீழ்ச்சியடைந்துள்ளது என முன்னாள் அமைச்சரும், ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்தார்.

ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் ஏற்பாட்டில் மறைந்த மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப்பின் 19வது நினைவேந்தல் நிகழ்வு வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையின் கேட்போர் கூடத்தில் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பிரச்சார செயலாளர் ஐ.எம்.ஹாரிப் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற போது மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்-

சிறுபான்மை முஸ்லிம் கட்சிகளை வைத்திருக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் நம்பியிருக்கின்றனர் சிறுபான்மை முஸ்லிம் மக்கள் எங்களுக்குத் தான் வாக்களிப்பார்கள் என்று. ஆகவே முஸ்லிம் மக்களின் வாக்குகளுக்கு மரியாதை இல்லை. முஸ்லிம் சமூகம் ஆட்சியை மாற்றும் சமூகம், ஆட்சியை நிர்ணயிக்கும் சமூகம், பெரும்பான்மையான சிங்களம், தமிழ் மக்களோடு வாழ்கின்ற அரசியலை தங்களுக்குள் தனியாக நடாத்துகின்ற தனித்துவம் பேசுகின்ற நிலையை மறைந்த தலைவர் அஷ்ரப் கொண்டு வந்தார்.

முஸ்லிம்களின் அரசியல் என்பது அஷ்ரப்பின் மறைவின் பின்பு பத்தொன்பது ஆண்டுகளுக்கு மிக மோசமாக வீழ்ச்சியடைந்துள்ளது. தற்போது அரசியலில் பிக்குகள், பேரினவாத சிறிய கட்சிகள் கூறுகின்றனர். முஸ்லிம்கள் எங்களுக்கு ஒன்றும் வைக்காமல் வருகின்ற அரசாங்கத்துடன் பேரம் பேசி எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு செல்கின்றனர்.

ஆனால் முஸ்லிம் சமூகங்களுக்கு ஒன்றும் வந்து சேரவில்லை. இவ்வாறான பிரமிப்புக்களை மூட்டி, பெரும் கோபத்தை முஸ்லிம் சமூகத்தின் மீது உருவாக்கி இன்று அரசியல் செய்யும் சூழ்நிலை இருக்கின்றது. அஷ்ரப் இருந்திருந்தால் இந்த சூழ்நிலை வந்திருக்க மாட்டாது. இவ்வாறான சூழ்நிலைகளை கையாளும் தலைமைத்துவங்கள் இல்லை.

தமிழர்கள் பிரச்சனையாக இருந்தாலும் சரி மற்றும் முஸ்லிம்களுடைய பிரச்சனையாக இருந்தாலும் சரி, தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களுடைய அரசியல் அபிலாசைகளை தீர்த்துக் கொள்ளக் கூடிய நடவடிக்கையாக இருந்தாலும் சரி நாங்கள் செய்ய வேண்டியது சிங்கள பெரும்பான்மை பௌத்த மக்களுடைய ஆதவை பெற்றவர்களை அனுகி ஆள வேண்டும்.

கடந்த மூன்று சதாப்பதங்களுக்கு மேலாக நடந்த தமிழ் மக்களுடைய அபிலாசைகளை அமைந்து கொள்கின்ற போராட்டத்தில் என்னுடைய தனிப்பட்ட கருத்தின் படி அந்த போராட்டம் விட்ட பெரிய பிழை என்பது சிங்கள மக்களுக்குள் எங்களது நியாயங்களை சொல்வதற்கு தவறி விட்டது. சிங்கள அரசியல்வாதிகள் தமிழர்களுக்கு எதிராக சொல்லி சிங்களவர்களை உசுப்பேத்தி விட தமிழ் அரசியல்வாதிகள் சிங்களவர்களுக்கு எதிராக பேசி சிங்களவர்களை எதிரிகளாக காட்டி தமிழ் மக்களுக்குள் தமிழ் மக்களை உசுப்பேத்தி நடந்த தனிப்பட்ட அரசியில்வாதியின் மாபெரும் அரசியல் கூத்து நடந்தேறிய சூழ்நிலையில் தான் யுத்தம் முடிவடைந்துள்ளது.

முஸ்லிம் இளைஞர்களை இஸ்லாம், மதம் என்ற பெயரில் உசுப்பேத்தி அவர்களே தங்களுடைய உயிர்களை பலி கொடுக்கின்ற அளவிற்கு பயன்படுத்த முடியும் என்ற பிரச்சாரங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றது என்றார்.

No comments

Powered by Blogger.