Header Ads



கொழும்பு கம்பன் விழாவில், இஸ்லாமியப் பேச்சுப்போட்டி அறிமுகம்

கொழும்பில் கம்பன் விழா நவம்பரில் நடைபெறவுள்ளது. அகில இலங்கைக் கம்பன்கழகம் ஆண்டுதோறும் கொழும்பிலும், யாழ்ப்பாணத்திலும் கம்பன்விழாக்களை நடத்தி வருகிறது.

நாற்பதாவது ஆண்டினைக் கடக்கும் கம்பன்கழகத்தின் 2019ஆம் ஆண்டுக்கான கொழும்புக்கம்பன்விழா எதிர்வரும் நவம்பர்  8,9,10,11,12திகதிகளில் நடைபெறவுள்ளது. இவ்வாண்டு கம்பன்கழகத்தின் வெள்ளிவிழாவாகவும் இது அமைகிறது.

 விழா நிகழ்ச்சிகள் கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடைபெறவுள்ளன.  வழமைபோல இவ்வாண்டும் நம்நாட்டு, தமிழ்நாட்டு, பிறநாட்டு அறிஞர்கள் பலர் இவ்விழாவில் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

இவ்விழாவில் பட்டிமண்டபம், வழக்காடுமன்றம், கவியரங்கம், கருத்தரங்கம், சிந்தனைஅரங்கம், சுழலும் சொற்போர், தனியுரை போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.  ‘மகரந்தச்சிறகுவிருது’, ‘ஏற்றமிகுஇளைஞர்விருது’, ‘நுழைபுலஆய்வுவிருது’, ‘நாவலர்விருது’, ‘விபுலானந்தர்விருது’ முதலிய விருதுகளும் வழங்கப்படவுள்ளன.   விழாவின் நிறைவுநாளில் நம்நாட்டைச்சேர்ந்த ஆறு துறைசார்ந்த அறிஞர்கள் கௌரவிக்கப்படவுள்ளதோடு  உலகளாவிய சாதனை செய்த ஒருவருக்கு கம்பன்புகழ் விருதும் வழங்கப்படவுள்ளது.  இவ்வாண்டு முதல் இலக்கியப் புரவலர் ஹாசிம் உமரின் அனுசரணையுடன் இஸ்லாமிய இலக்கியப் பேச்சுப்போட்டியும் நடைபெறவுள்ளது. உமறுப்புலவர் இயற்றிய சீறாப்புராணம் எனும் காவியம் இவ்வாண்டு இஸ்லாமிய இலக்கியப் பேச்சுப் போட்டியின் கருப்பொருளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.