Header Ads



வீரவன்சவின் குற்றச்சாட்டு – அமெரிக்கா பதில்

சிறிலங்காவில் பாதுகாப்பை தாங்கள் தீவிரமாக எடுத்துக் கொள்வதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச சுமத்தியிருந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள அமெரிக்க தூதரக பேச்சாளர்,

“அனைத்து தூதரக பணியாளர்கள் மற்றும் அதிகாரபூர்வ விருந்தினர்களும், வியன்னா பிரகடனத்துக்கு அமைய, சிறிலங்காவின் பாதுகாப்பு நடைமுறைகளுக்கு இணங்கிச் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.

ஒரு மாதத்திற்கு முன்னர் ஹில்டன் விடுதியில், நடந்த ஒரு தவறான புரிந்துணர்வு தொடர்பாக நாங்கள் அறிவோம், அந்த விவகாரம்   தீர்க்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவின் பாதுகாப்பு அதிகாரிகளுடன் எமது பாதுகாப்பு அதிகாரிகள் நெருக்கமான ஒருங்கிணைப்புடன் பணியாற்றுகிறார்கள்.  அவர்களுக்கு  சிறந்த ஒத்துழைப்பு வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. இந்தப் போக்கிரி உண்மையைப் பேசுகின்றான்.ஆனால் அமெரிக்காவின் டிப்போலஸி பொய்யையும் புளுகலையும் கொட்டுகின்றான்.யாரை யார் ஏமாற்றுவது என்பது புரியவில்லை.

    ReplyDelete
  2. Well said USA
    SL needs more involvements from USA

    ReplyDelete

Powered by Blogger.