Header Ads



சஜித்துடன் இணைந்து கூட்டணிக்கு மைத்திரி முயற்சி

சஜித் பிரேமதாசவுடன் இணைந்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு இடையில் கூட்டணி ஒன்றை உருவாக்குவதற்கான விருப்பம் சுதந்திரக் கட்சியிலுள்ள சிலருக்கு உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாச இணைந்து புதிய அரசாங்கத்தை உருவாக்குவது தொடர்பாக பெரிய பேச்சுவார்த்தைகள் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினுள் நடைபெற்றது.

இது குறித்து எனக்கும் சந்தேகம் உள்ளது.

எவ்வாறாயினும் சஜித் பிரேமதாசாவுடன் இணைந்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி இடையில் கூட்டணி ஒன்றை உருவாக்குவதற்கான விருப்பம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சில பிரிவுக்கு உள்ளது.

தயாசிறி ஜயசேகர, வீரகுமார திஸாநாயக்க போன்றோருக்கு அந்த விருப்பம் இருப்பதாக நான் அறிகின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.

1 comment:


  1. மக்களும் நாடும் என்னபோக்கு போனாலும் அது எமக்கு பிரச்சினையல்ல, கட்சியின், கூட்டணிகளின் பெயர்களால் தங்கள் இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள அடாவடிகள் தயாராகின்றனர். இந்த சந்தர்ப்பத்தில் மக்கள் குறிப்பாக இந்த நாட்டு மக்கள் பாரிய ஒரு பிரச்சினையை எதிர்நோக்கியிருக்கின்றனர். மக்களின் நலன் கருதியும் நாட்டின் நலனை முன்வைத்தும்செயல்படும் அபேட்சகர்களைக் கண்டுபிடிப்பது இலகுவான காரியமல்ல. ஏனெனில் பல வருடங்களாக பொய்யையும் புரட்டையும் முற்படுத்தி வாக்குகளைப் பெற்று பதவிக்கு வந்தபின் பொதுச் சொத்துக்களைச் சூறையாடவும் அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்யவும் இந்த நாட்டு அரசியல்வாதிகள் பல்லாண்டுகளாக பழகியிருக்கின்றனர்.அவர்களில் உண்மையான நோக்கத்துடன் செயல்படுபவர்களைக் கண்டுபிடிப்பது என்பது இலகுவான காரியமல்ல.

    ReplyDelete

Powered by Blogger.