Header Ads



ரணில், மைத்திரியின் செயல்களை பார்த்தால் சிரிப்புத்தான் வருகிறது

அமைச்சரவை கூட்டத்திற்கு ஜனாதிபதியும் பிரதமரும் ஒன்றாக வந்தாலும் கூட்டத்தை விட்டு வெளியே வந்ததும் ஒருவரையொருவர் எவ்வாறு தாக்கிக்கொள்வது என்றே சிந்திக்கின்றார்கள் என முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று -13- நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

இலங்கை நாடாளுமன்றமானது கேலிக்கூத்து ஆடுமிடமாகவே காணப்படுகின்றது. நல்லாட்சி அரசாங்கத்தினாலே இந்நிலை இலங்கை நாடாளுமன்றத்திற்கு ஏற்பட்டுள்ளது.

நாட்டை பிளவு படுத்தும் சர்வதேச சக்திகள் நாடாளுமன்றில் உள்ள 225 பேரையும் அவர்களுக்கு தேவையான முறையில் இயக்க நினைத்தே நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்க வாய்ப்பளித்தனர்.இருந்தாலும் எமது 54 பேரை கொண்ட குழு எதிர்க்கட்சியில் அமர்ந்ததால் அந்த வெளிநாட்டுச்சக்திகள் ஏமாற்றமடைந்து.

இந்த அரசாங்கம் அரச நிறுவனங்களை நாசமாக்குவதே முதலாவது வேலையாக செய்து கொண்டிருக்கின்றனர்.

அவ்வாறான சந்தர்ப்பத்தில் தான் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் ஜனாதிபதியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது.

ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவரின் வாகனத்திற்கு எரிபொருள் நிரப்புவதற்காக வழங்கப்பட்டிருந்த ரூபாய் 2800 பெறுமதியான காசோலை கூட வங்கியால் நிராகரிக்கப்பட்டது. ஏனெனில் வங்கியில் பணமில்லை.

அவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் அந்நிறுவனத்தை பாதுகாக்கவே ஜனாதிபதி அதிவிசேட வர்த்தமானி மூலம் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளார்.

இதற்கான முக்கிய காரணம் இரண்டு காட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சிபுரிவதே.

உலகிலேயே முதல் முறையாக இரண்டு பெரிய சக்திகள் ஒன்றிணைந்து நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்கியிருப்பதாக இவர்கள்பெருமையுடன் கூறினார்கள். அது தற்பொழுது கேளிக் கூத்தாகவே காணப்படுகிறது.

அதன் மூலம் நாட்டை பாரிய பள்ளத்தாக்கில் தள்ளிவிட்டுள்ளனர். சற்று சிந்தித்துப் பாருங்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜென்ம எதிரி யார்? அது ஐக்கிய தேசியக் கட்சியும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் என்பது அனைவரும் அறிந்த விடயமாகும்.

அதேபோல ரணிலின் பிரதான எதிரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியே ஆகும்.

இரண்டு எதிரிகள் இணைந்து ஆட்சிப் புரியும் போது நாடு முன்னேறுமா? அதேபோல ஜென்ம எதிரிகள் இருவர் அமைச்சரவையில் அமர்ந்து நாடு தொடர்பான தீர்மானங்களை எடுக்கினறார்கள். வெளியில் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்கின்றனர்.

ஜனாதிபதி இரவு நேரத்தில் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல்களை வெளியிட்டு நிறுவனங்களை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருகிறார்.

அதன் பின்னர் அடுத்த புதன் கிழமை இருவரும் அமைச்சரவை கூட்டத்திற்கு வருகிறார்கள். இப்படி செய்தால் நாடு முனனேரறுமா? சிரிப்புதான் வருகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.