Header Ads



கோத்தபாய மீது, அனைவருக்கும் அச்சம் இருக்கின்றது - ரஞ்சன்

விசர் நாய் ஒன்று வந்தால், அதன் தலையை தடவி கொடுப்பார்களா அல்லது தொப்புளை சுற்றி போடும் 21 மருந்து ஊசிகள் நினைவுக்கு வந்து ஓட்டம்பிடிப்பார்களா என இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.

 நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணைகளின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

கோத்தபாய ராஜபக்சவுக்கும் எனக்கும் இடையில் தனிப்பட்ட பிரச்சினைகள் எதுவுமில்லை. கோத்தபாய மீது அனைவருக்கும் அச்சம் இருக்கின்றது.

ஊடகவியலாளர்களுக்கும் அச்சம் உள்ளது. உங்களில் எத்தனை பேரை கொன்றார். 36 ஊடகவியலாளர்களை கொலை செய்தவரை ஊடகவியலாளர்கள் விரும்புவார்களா?. விரும்புவதில்லை. அவரை பார்க்கும் போது ஓடி விடுவார்கள்.

ஊடகங்கள் மீது தாக்குதல் நடத்தியது யார் என்பது அனைவருக்கும் தெரியும். கோத்தபாயவுக்கு மகிந்தவும் பயம். நாமல், ஷிரந்தி என அனைவரும் பயம்.

அவர் ஆட்சிக்கு வந்தால், தனக்கும் பிரச்சினையாகி விடும் என்பது நாமலுக்கு தெரியும். கோத்தபாய கட்டுப்பாடு இல்லாத மனுஷன். மகிந்த ராஜபக்ச இதனை அந்த காலத்தில் தனிப்பட்ட ரீதியில் கூறியுள்ளார்.

கோத்தபாயவை கட்டுப்படுத்த முடியாதாம், அவருக்கு கோபம் வருமாம். லசந்த விக்ரமதுங்கவை கொலை செய்யும் முன்னர் நடந்த தொலைபேசி உரையாடலின் பதிவுகள் இருக்கின்றன.

கௌதம புத்தரை பார்க்கும் போது எமக்கு ஒரு இறக்கம் ஏற்படும். புத்தரை பார்த்தால் மக்கள் அச்சம் கொள்ள மாட்டார்கள், காண்பதற்காக ஓடுவார்கள். யேசுவை பார்த்தால் மக்கள் அன்பில் அவரிடம் செல்வார்கள்.

விஜயகுமாரதுங்கவை பார்த்தால் மக்கள் அன்பு காரணமாக அவரிடம் சென்று அணைத்துக் கொள்வார்கள். ஆனால், கோத்தபாயவை பார்த்தால் மக்கள் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடுவார்கள்.

அது அவருடைய வரலாறு. அவர் கொலை செய்துள்ளார். கொள்ளையடித்துள்ளார். மக்கள் கோத்தபாயவுக்கு பயம், ஆனால் அவர் நீதிமன்றத்திற்கு பயம்.

நீதிமன்றம் என்றதும் அவர் தப்பியோடி விடுவார். நீதிமன்றம் என்றதும் இல்லாத நோய்கள் அவருக்கு ஏற்படும். நீதிமன்றத்திற்கு பயந்து சிங்கப்பூருக்கு ஒழிந்துக்கொண்டார். இவை எல்லாம் அனைவருக்கு தெரிந்த கதைகள்.

என்னிடம் நீங்கள் அச்சமின்றி பேசுகின்றீர்கள், கோத்தபாயவுடன் பேசும் போது உங்கள் கைகள் நடுங்கும். ஊடவியலாளர்கள் கோத்தபாயவிடம் கேள்வி கேட்க பயப்படுகின்றனர்.

அவரிடம் அவர் சம்பந்தப்பட்ட குற்றங்கள் தொடர்பான கேள்விகளை ஊடகவியலாளர் கேட்பதில்லை. விசர் நாய் ஒன்று இந்த இடத்திற்கு வந்தால் ஓடுவீர்களா தலையை தடவி கொடுப்பீர்களா?.

விசர் நாய் வந்தால், தொப்புளை சுற்றி 21 ஊசி போடுவது நினைவுக்கு வந்து ஓடி விடுவார்கள். இப்படிதான் கோத்தபாய ராஜபக்ச வந்தாலும் பயந்து ஓடி விடுவார்கள் என ரஞ்சன் ராமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. crystal clear ... still some media& journalist back him for benefits.

    ReplyDelete

Powered by Blogger.