Header Ads



கோத்தபாயவுக்கு நெருக்கடி அதிகரிக்கிறது - இன்று நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவின் இரட்டை குடியுரிமை தொடர்பான ஆவணத்தின் உறுதிப்படுத்திய பிரதியை உடனடியாக குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது சம்பந்தமான ஆவணங்கள் தம்மிடம் இல்லை எனவும் அது பாதுகாப்பு அமைச்சில் இருப்பதாகவும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்திருந்தது. எனினும் அப்படியான ஆவணம் தம்மிடம் இல்லை என பாதுகாப்பு அமைச்சு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திடம் அந்த ஆவணங்கள் இருப்பதாக பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதனை தவிர 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான மெதமுலன பகுதியின் வாக்குச் சாவடியுடன் சம்பந்தப்பட்ட தகவல்களை வழங்குமாறு ஹம்பாந்தோட்டை மாவட்ட அரச அதிபருக்கு உத்தரவிடுமாறும் குற்றப் புலனாய்வு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

வாக்குச் சாடியில் பணியாற்றி அதிகாரிகள், ஊழியர்கள், கட்சி பிரதிநிதிகளின் விபரங்களை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் வழங்குமாறு நீதிமன்றம், ஹம்பாந்தோட்டை மாவட்ட அரசாங்க அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.

இரட்டை குடியுரிமை சம்பந்தமாக 2005 ஆம் ஆண்டு பதிவேட்டின் 13305 இலக்கத்தின் கீழ் நந்தசேன கோத்தபாய ராஜபக்சவின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தாலும் கணனி அச்சு பிரதிகளில் அந்த இலக்கத்தின் கீழ் வேறு ஒருவரின் பெயர் இருப்பதாகவும் குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.