Header Ads



அடுத்த வாரம் ஜனாதிபதி, வேட்பாளர் குறித்து தீர்மானிக்கப்படும் - ரணில்

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து அடுத்த வாரம் தீர்மானிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் இதனை தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் நவம்பர் மாதம் 16ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என உத்தியோகபூர்வமாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அத்துடன், ஜனாதிபதி தேர்தலுக்கான வைப்புப் பணம் நாளை நண்பகல் 12 மணியில் இருந்து ஒக்ரோபர் ஆறாம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.

வேட்புமனு ஒக்ரோபர் 7ம் திகதி காலை 9 மணியில் இருந்து முற்பகல் 11 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.

முன்னதாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வகையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகள் வேட்பாளரை அறிவித்துள்ளன.

எனினும், ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில்பில் போட்டியிடும் வேட்பாளரை தெரிவு செய்வதில் குழப்பநிலை ஏற்பட்டிருந்தது.

அந்த கட்சியின் சார்பில் பிரதமர் ரணில், அமைச்சர் சஜித் மற்றும் சபாநாயகர் கருஜயசூரிய ஆகியோர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இதனால் அந்த கட்சியின் சார்பில் வேட்பாளரை தெரிவு செய்வதில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ள நிலையில், அடுத்த வாரம் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து தீர்மானிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.