Header Ads



சஜித் பிரே­ம­தா­ஸவை அக்­கட்­சியின், உறுப்­பி­னர்­களே வீழ்த்­து­வார்கள் - சந்ரசேன

ஐக்­கிய தேசிய கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­ஸவை அக்­கட்­சியின் உறுப்­பி­னர்­களே வீழ்த்­து­வார்கள். தமது ஆத­ரவு எத்­த­ரப்­ பி­ன­ருக்கு என்­பதை  சுதந்­திர கட்சி 30ஆம் திகதி இடம் பெற­வுள்ள செயற்­குழு கூட்­டத்தில் அறி­விக்கும்  என்று  எதிர்­பார்க்­கின்றோம் என எதி­ர­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எஸ்.எம். சந்ரசேன தெரி­வித்தார்.

பொது­ஜன பெர­மு­னவின் தலைமை காரி­யா­ல­யத்தில்  இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்துக் கொண்டு கருத்­து­ரைக்­கை­யி­லேயே  அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.  

அவர்  மேலும் உரை­யாற்­று­கையில் 

2015ஆம் ஆண்டு அன்னப்  பற­வைக்கு வாக்­க­ளித்து நாட்டு மக்கள் செய்த தவறை மீண்டும் செய்­ய­மாட்­டார்கள். பொது­வேட்­பா­ள­ராக  சுதந்­திர கட்­சியின் பொதுச்­செ­ய­லாளர் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை  கள­மி­றக்­கியே ஐக்­கிய தேசிய கட்­சியின் தலைவர் ரணில் விக்­ர­ம­சிங்க  ஜனா­தி­பதி தேர்­த­லையும், அதனை தொடர்ந்து இடம் பெற்ற பொதுத்­தேர்­த­லையும் வெற்றிக் கொண்டார்.

இம்­மு­றையும் ஜனா­தி­பதி தேர்­தலில் பொது­வேட்­பாளர் ஒரு­வரை கள­மி­றக்கி தனது அர­சியல் பய­ணத்தை  தொட­ர­லாம்எ ன்று பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க பாரிய முயற்­சி­களை மேற்­கொண்டார். கட்­சியின் உறுப்­பி­னர்­களில் பெரும்­பா­லானோர் தமது அர­சியல் எதிர்­கா­லத்தை கருத்திற் கொண்டு  அமைச்சர் சஜித் பிரே­ம­தா­ஸ­விற்கு ஆத­ரவு வழங்­கி­னார்கள்.

ஐக்­கிய தேசிய கட்­சியின்  நெருக்­கடி இக்­கட்­டான நிலை­மைக்கு சென்­றதை தொடர்ந்தே பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க பல நிபந்­த­னை­க­ளுடன் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக சஜித் பிரே­ம­தா­ஸவை ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக அறி­வித்­துள்ளார். நிபந்­த­னை­க­ளுக்கு தான் அடி­ப­ணிய வில்லை என்று  அமைச்சர் சஜித் பிரே­ம­தாஸ குறிப்­பி­டு­கின்றார். மறு­புறம்  நிபந்­த­னை­களின் பிர­கா­ரமே வேட்­பாளர் தெரிவு இடம் பெற்­றுள்­ளது என்று ஐக்­கிய தேசிய கட்­சியின் பொதுச்­செ­ய­லாளர் அகில விராஜ்­கா­ரி­ய­வசம் குறிப்­பி­டு­கின்றார்.

ஐக்­கிய  தேசிய கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­ஸவை அக்­கட்­சியின் உறுப்­பி­னர்­களே  வீழ்த்­து­வார்கள். நிச்­சயம் பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பாளர் கோத்­த­பய ராஜ­பக்ஷ வெற்றிப் பெறுவார். பொதுத்­தேர்­த­லினை தொடர்ந்து பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க  எதிர்க்­கட்சி தலைவர் பதவி வகிப்பார். ஆளும் தரப்பின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக போட்­டி­யிடும் சஜித் பிரே­ம­தா­ஸவின் அர­சியல் எதிர்­காலம் கேள்­விக்­கு­றி­யாக்­கப்­படும் என்றார். 

இவ்­வூ­டக சந்­திப்பில் கலந்துக் கொண்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சி.பி ரத்­னா­யக்க குறிப்­பி­டு­கையில்,  

இலங்கை தொழி­லாளர் காங்­கிரஷ் பொது­ஜன பெர­மு­ன­வுடன் கூட்­ட­ணி­ய­மைத்து ஆட்சி மாற்­றத்தை ஏற்­ப­டுத்தும். அன்­னப்­ப­றவை சின்­னத்­திற்கு 2015ஆம் ஆண்டு வாக்களித்து வடக்கு கிழக்கு உட்பட மலையக தமிழ் மக்கள் பெற்றுக் கொண்டது ஏமாற்றங்களேயாகும். 

 அரசியல்வாதிகளின் கருத்துகளுக்கு கவனம் செலுத்தாமல் தமிழ் மக்கள்  தனித்து அரசியல் ரீதியர்ன தீர்மானங்களை எடுக்க வேண்டும். போலியான வாக்குறுதிகளை ஒருபோதும் வழங்க மாட்டோம் என்றார்.

No comments

Powered by Blogger.