Header Ads



பலகத்துறையில் அல் பலாஹ் என்ற பெயரில், மகளிர் அமைப்பு உருவாக்கம் (படங்கள்)


அஸ்ஸலாமு அலைக்கும்.

 இதுவரை காலமும் எமது ஊரில்  பல அமைப்புகள் ஆண்களால் ஆரம்பிக்கப்பட்டு  ஊரின் வளர்ச்சிக்காக முயற்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இனி வரும் காலங்களில் எமது ஊரில்  பெண்கள்  சார்பாக  பெண்கள் நலன்புரி அமைப்பு என்பது எமது ஊரில் இல்லாமல் இருந்த குறையை நீக்கி  பொதுவாக  Old  கேர்ள்ஸ்  ( ஓ ஜி ஏ ) என்ற அமைப்பை தவிர  வேற அமைப்புகள் இல்லாத சந்தர்ப்பத்தில்  தற்போது  மாஷா அல்லாஹ்  எமது ஊரில் உள்ள  தாய்மார்களும்   உரிமைக்காக தங்களின் தேவைகளுக்காக நாமும் களம் இறங்கி செயல்பட வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு முன்வந்துள்ளார்கள். அல் பலாஹ்  மகளிர் அமைப்பு என்ற பெயரில்  ஆரம்பித்துள்ளார்கள்.

 இவர்களின் நிர்வாகக்குழு கூட்டத் தீர்மாணத்துக்கு அமைய,  அவர்களது சேவையின் தேவைக்காக  அவர்களது  வேண்டுகோளுக்கமைய  ஹட் மற்றும் கதிரைகல்  சிலவற்றையும் வழங்கி வைத்தார் எமது ஊரைச் சேர்ந்த முன்னாள் மேல் மாகான சபை  உறுப்பினர் எம் எஸ் எம் சகாவுல்லா அவர்கள்.

ஊரில் சமூக நலத்திட்டங்களுக்காக பாரபட்சமின்றி தன்னால் ஆன ஏற்பாடுகளை செய்து கொடுக்கும்  m s m. sakaulla  அவர்களுக்கு நன்றி பாராட்டுவதுடன்,  அல் பலாஹ் மகளிர் அமைப்பு தமது சேவையைத் தொடர வாழ்த்துவோம் .

இந்த நிகழ்வு நேற்று 13 / 09 / 2019 வெள்ளிக்கிழமை  ஆப்தீன் மாவத்தையில் சென்ட்ரல் பள்ளிக்கு அருகாமையில் சகோதரர் சித்தீக் அவர்களது வீட்டுக்கு அருகில் நடைபெற்ற நிகழ்ச்சியின் காட்சிகள்  இங்கு பதிவதன் மூலம் ஊரவர்களுக்கு அறியத்தருகிறோம்.

  இனிவரும் காலங்களில் எமது ஊரில் பல துறையிலிருந்து பெண்களும் செயல்பட முன்வந்துள்ளார்கள்.
 எனவே இவர்கள் மூலம்  பெண்களின்  தேவைகள் சேவையாக செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

      தகவல் 
 M Fபாயிஸீன்


No comments

Powered by Blogger.