September 07, 2019

தமிழ் கிராமங்களை முஸ்லிம்கள், தமக்குரியது என கூறுவது அதிகரித்துள்ளது - வியாழேந்திரன்

கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் யுத்த காலத்தில் பாதுகாக்கப்பட்ட தமிழர்களின் கிராமங்கள் கடந்த காலத்தில் குறிப்பாக இந்த நல்லாட்சியின் காலத்தில் அதிகமாக தமிழர்களின் எல்லை கிராமங்களும், தமிழர்களின் வழிபாட்டுத் தலங்களும் பறிபோகின்ற துர்ப்பாக்கிய நிலைக்கு கிழக்கு தமிழர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வாகனேரி கிராமமானது கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக தமிழர்களின் விவசாயம் கடற்தொழில் போன்ற தொழில்களை மையமாக கொண்டு வாழ்ந்து வருகின்ற தமிழர்களின் பூர்வீக கிராமங்கள் ஆகும்.

அவ்வாறே தமிழர்கள் தங்களது குடியிருப்பு நிலப்பரப்பில் வழிபாட்டுத் தளங்களையும் அமைத்து வழிபட்டனர்.

அதனடிப்படையில் வாகனேரி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம் ஆனது 1988 5மாதம் 30 திகதி சட்டரீதியாக பதியப்பட்டுள்ளது இதற்கு முதல் அந்த ஆலயத்தை மரபுவழியாக வழிபட்டு வந்ததாக குடியிருப்புவாசிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு இந்த ஆலயத்தினை கடந்த 30 வருடங்களுக்கு மேலாக தமிழர்கள் பராமரித்து வந்தனர். தற்சமயம் ஆலயத்துக்கான கட்டுமான பணிகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.

நிலைமை இவ்வாறிருக்க கடந்த 23 /08/2019 திகதி ஆலயமானது மர்ம நபர்களால் சேதமாக்கப்பட்டு ஆலயத்தின் கட்டுமான தூண்கள் அடித்து நொறுக்கப்பட்டு மனித கழிவுகளை கொண்டு ஆலய மூலஸ்தானத்தின் புனித தன்மை கெட்டுப் போகும் அளவுக்கு நாசகார வேலை ஒன்றை காட்டுமிராண்டித்தனமாக அரங்கேற்றி இருந்தார்கள்.

சம்பவத்தின் போது ஆல் முபாரக் ஜும்மா பள்ளியின் பற்றுசீட்டு அமீக் என்று பெயரிடப்பட்டு ஆலயத்தின் மூலஸ்தானத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நடைபெற்ற சம்பவத்தை தொடர்ந்து வாகனேரி மக்களால் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் அழைக்கப்பட்டு சம்பவத்தை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

மட்டக்களப்பில் மாத்திரம் இந்த நல்லாட்சியின் காலத்தில் 12 இந்து கோயில்கள் மர்ம நபர்களால் தாக்கப்பட்டு உள்ளதாகவும், இந்த ஐந்து வருட ஆட்சியில் கிழக்கு மாகாணத்தில் பல தமிழ் கிராமங்களை முஸ்லிம்கள் தனக்கு உரியது என்று கூறிக்கொள்ளும் செயலானது நாளுக்கு நாள் இடம்பெற்று வருகின்றது.

கிழக்கு மாகாண தமிழர்கள் தங்களது நீதி மறுக்கப்படுகின்ற போது தளத்திற்கு சென்று அவர்களின் நீதியான நியாயமான போராட்டத்தில் கலந்து கொள்கின்ற போது முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஒரு சில தமிழ் அரசியல்வாதிகளாலும் தான் இனவாதியாக சித்தரிக்கப்படுவதாகவும் அதைப்பற்றி தனக்கு கடுகளவும் கவலை இல்லை.

நான் மக்களுக்காகவே நாடாளுமன்றம் அனுப்பப்பட்டவன், ஆதலால் எனது குரல் எப்பொழுதும் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக இருக்கும்.

இந்த சம்பவத்தில் ஓட்டமாவடி பிரதேச தவிசாளர் எம்.ஐ.ஹமீத் மெளளவி அவர்களின் கருத்தை தம்மால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது வாகநேரி ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயகாணி ஜப்பார் திடல் என்று பெயர் இருந்தால் சட்டரீதியான ஆதாரங்களை முன் வைக்குமாறும், கடந்த காலங்களில் போலி முத்திரைகளை வைத்து தமிழர்களின் நில வளத்தை சூறையாடும் வேலைத்திட்டங்களை இனிவரும் காலங்களில் நடைபெறுவதற்கு இடமளிக்கப் போவதில்லை.

யுத்தம் மௌனிக்கப்பட்டு பத்து வருடங்களாக இல்லாத காணியை தற்போது தனக்கானது என்று போலி ஆவணங்களுடன் வருகின்ற செயற்பாடானது தனக்கு வேடிக்கையாகும் இந்த விசமத்தனங்களுக்கு தமிழர்கள் இனி ஆளாக போவதில்லை.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நல்லிணக்கத்தினால் அதிகம் முஸ்லிம்களை நன்மை அடைந்து இருக்கின்றார்கள். தமிழர்கள் பல வழிகளிலும் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கின்றார்கள்.

நல்லிணக்கம் என்பது பல்லின சமூகமும் சமமான அந்தஸ்தோடும், உரிமையோடும் வாழ்வதாகும் கிழக்கை பொறுத்தவரை அவ்வாறு ஒரு நல்லிணக்கம் தற்காலத்தில் நடைமுறையில் இல்லை.

இனியும் தமிழர்கள் சரியாக சிந்தித்து எதிர்கால அரசியலில் பேரம் பேசி தங்களுக்கான அதிகாரத்தையும், தங்களுக்கான உரிமை சார்ந்த பிரச்சினைகளையும் பெற்று கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

7 கருத்துரைகள்:

வாக்குகளை பெறுவதற்கான புலம்பல்

புலி பயங்கரவாதிகள் இன்னும் நாட்டில் சுதந்திரமாக நடமாடிக்கொண்டு இருக்கிறார்கள். கருணா இவர்களில் ஒருவன் மற்றவன் வியாழேந்திரன்.

Please be at on field to protect land grabbing from islamic terrorism.
Islamophia is a threaten to the east tamils.

Almost all the Jaffnamuslims lost their lands in hands of LTTE in the past.. Did all of them got their lands back to date.

True Muslims will not take others land as It is HARAAM for them and will prevent them from entering Paradise in the next world.

இவன் ஒரு புலிப் பயங்கரவாதி

Dear Bro Ghouse: innum 2 mattu muthiram kudikra sori naigal JM comment paanum 1.AJAN 2.ANUSH

Viyalanthiran, your former Tamil terrorist intelligent,
You have many criminal cases,

Post a comment