Header Ads



இலங்கை கிரிக்கெட் நிறுவனம், அரசாங்கத்திற்கு விடுத்துள்ள கோரிக்கை


இலங்கை கிரிக்கெட் அணியின் பாகிஸ்தான் விஜயத்துக்கு முன்னர் பாகிஸ்தானின் பாதுகாப்பு நிலைமை தொடர்பாக மீண்டும் ஒருதடவை ஆராய்ந்து பார்க்குமாறு இலங்கை கிரிக்கெட் நிறுவனம், இலங்கை அரசாங்கத்தை கோரியுள்ளது.

இந்த விஜயம் தொடர்பாக பிரதமர் அலுவலகம் விடுத்த எச்சரிக்கை தொலைத்தொடர்புகள் அமைச்சின் ஊடாக தமக்கு கிடைத்திருப்பதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விஜயத்தின்போது இலங்கை கிரிக்கெட் அணி மீது தாக்குதல் நடத்தப்படலாம் என பிரதமர் அலுவலகத்துக்கு நம்பிக்கைக்குரிய தகவலொன்று கிடைத்துள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, இந்த நிலைமையின் கீழ் பாகிஸ்தான் விஜயத்துக்கு முன்னர் மீண்டும் ஒரு தடவை பாகிஸ்தானின் பாதுகாப்பு நிலைவரம் தொடர்பாக பரிசீலிக்குமாறு தமக்கு ஆலோசனை கிடைத்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் விடுத்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2 comments:

  1. ஏற்கனவே ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல்கள் பற்றிய தகவல்கள் RAW ஆல் முன்கூட்டியே
    இலங்கை பாதுகாப்பு அதிகாரிகளுக்கு சொல்லப்பட்டது. சோம்பேறித்தனமோ, நம்பவில்லையோ, கடைசியில் 300 அப்பாவி மக்கள் இறந்தார்கள்..

    எனவே இலங்கை அணி இந்த முறை அங்கு சென்றால், பாக்கிஸ்தானியர்கள் நமது players மீது தாக்குதல்கள் நடாத்துவார்கள் என்ற தகவல்களை நம்பித்தான் ஆகவேண்டும்.
    இலங்கையில் முஸ்லிம்கள் மீது சில வருடங்களாக சிங்களவர்கள் தாக்குதல்கள் செய்வதாலும், இலங்கை players பழி வாங்கப்படலாம்.

    ReplyDelete
  2. Batter to avoid this tour....

    India midi government May plot to conduct such m attack on srilankan players in Pakistan using some terrorists.... in order to distance srilanka from Pakistan long existing relation... God forbids if such incident happen it will harm Muslim minority living our land too.

    Unless and otherwise Pakistan can give full safety for our players.. Batter to avoid this tour for the sake of peace.

    ReplyDelete

Powered by Blogger.