Header Ads



பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம், ஜனாதிபதிக்கு இல்லை - ரணில்

இந்த ஆண்டு இறுதிக்குள் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படவுள்ளதால் அடுத்த ஆண்டு முதல் காலாண்டுக்கான இடைக்கால கணக்கறிக்கை ஒன்றினை முன்வைக்க வேண்டுமா என்பது குறித்து தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை எனத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எனினும் இது தொடர்பில் ஆராயப்படும் என்றும் கூறினார்.

அதேபோல் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை, பாராளுமன்றமே தீர்மானம் எடுக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

"2020ஆம் ஆண்டுக்காக வரவு செலவு திட்டமொன்று அரசாங்கத்தினால் முன்வைக்கப்படுமா? அவ்வாறு இல்லையென்றால் இடைக்கால கணக்கறிக்கை ஒன்றாவது முன்வைக்கப்படுமா? அடுத்த ஆண்டு முதல் நான்கு ஆண்டுகளுக்கு இடைக்கால கணக்கறிக்கை மூலமாக நிதி ஒதுக்கும் நிலையில் அரசாங்கதின் வரவு அதிகரிக்காது செலவு மட்டுமே அதிகரிக்கும். 

அதனை தொடர்ந்து மீண்டும் பொதுத் தேர்தல் ஒன்றுக்கு செல்லும் நிலையில் அதன் பின்னர் வரும் அரசாங்கம் எதுவாக இருந்தாலும் நெருக்கடிக்கு தள்ளப்படும் என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாநயக்க எழுப்பிய பாராளுமன்றில் இன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

No comments

Powered by Blogger.