September 09, 2019

போரா ம‌காநாடு - ப‌ண‌ம் என்றால், இன‌வாத‌ப் பேயும் வாய்மூடும்

- போரா (Bohra) முஸ்லிம்க‌ளின் ப‌ள்ளிவாச‌லுக்குள், ஏனைய‌ முஸ்லிம்க‌ள் அனும‌திக்க‌ப் ப‌டுவ‌தில்லை. தொழுகைக்கு வ‌ருவோர் போரா அடையாள‌ அட்டை காட்ட‌ வேண்டும்.

- போரா ச‌மூக‌த்திற்கு வெளியில் பிற‌ முஸ்லிம்க‌ளுட‌ன் கூட‌ திரும‌ண‌ம் செய்வ‌த‌ற்கு அனும‌தி இல்லை. இது சாதிய‌க் க‌ட்டுப்பாடு போன்று மிக‌க் க‌டுமையாக‌ பின்ப‌ற்ற‌ப் ப‌டுகிற‌து.

- போரா ச‌மூக‌த்தில் ம‌த‌க் க‌ட்டுப்பாடுக‌ளை மீறுவோர் ம‌த‌ நீக்க‌ம் செய்ய‌ப்ப‌ட்டு. ச‌மூக‌த்தில் இருந்து த‌ள்ளி வைக்க‌ப் ப‌டுவார்க‌ள். அவ்வாறு வில‌க்க‌ப் ப‌ட்ட‌வ‌ருட‌ன் குடும்ப‌ உறுப்பின‌ர்க‌ள் உட்ப‌ட‌ யாரும் தொட‌ர்பு வைக்க‌க் கூடாது.

- பெண்க‌ள் க‌றுப்பு நிற‌ம் த‌விர்ந்த‌ ப‌ல‌ வ‌ர்ண‌ பூர்க்கா அணிகின்ற‌ன‌ர். (ஆனால், ப‌ல‌ பெண்க‌ள் வேலையிட‌த்தில் சாதாரண‌ ஆடை, ச‌மூக‌த்தினுள் பூர்க்கா என்று இட‌த்திற்கு ஏற்ற‌வாறு மாற்றிக் கொள்கிறார்க‌ள்.)

- போராக்க‌ள் ஷியா முஸ்லிம்கள் ம‌ட்டும‌ல்லாது, அதிலும் ப‌ன்னிர‌ண்டாவ‌து இமாம் என‌க் க‌ருத‌ப் ப‌டும் இஸ்மாயில் அலி பிரிவை சேர்ந்த‌வ‌ர்க‌ள். அதாவ‌து ஷியாவில் இன்னொரு பிரிவு. (இஸ்மாயில் ம‌த‌ப் பிரிவில் கூட‌ போரா ச‌மூக‌ம் த‌னித்துவ‌மான‌து.)

- சுமார் 40 நாடுக‌ளில் போரா முஸ்லிம்க‌ள் வாழ்கின்ற‌ன‌ர். அர‌பு நாடுக‌ளில் ஷியாக்க‌ள் ஒடுக்க‌ப் ப‌ட்ட‌ நேர‌ம் போராக்க‌ள் இந்தியாவுக்கு புல‌ம்பெய‌ர்ந்த‌ன‌ர்.

- இந்தியாவில் குஜ‌ராத், மும்பை ஆகிய‌ இட‌ங்க‌ளில் போராக்க‌ள் பெரும்பான்மையாக‌ இருப்ப‌தால் த‌லைமை ம‌த‌குரு சையேத்னாவும் மும்பையில் தள‌ம் அமைத்துள்ளார்.

- ஜ‌காட் எனும் இஸ்லாமிய‌ ம‌த‌க் க‌ட‌மையாக‌ ஒவ்வொரு உறுப்பின‌ர‌து வ‌ருமான‌த்திலும் க‌ழிக்க‌ப் ப‌டும் ப‌ண‌ம் நேர‌டியாக‌ த‌லைமை ம‌த‌குரு சையேத்னாவுக்கு போகிற‌து.

- 2002 குஜ‌ராத்தில் ந‌ட‌ந்த‌ முஸ்லிம் இன‌ப்ப‌டுகொலைக்கு பின்ன‌ர், சையேத்னா ந‌ரேந்திர‌ மோடியை ச‌ந்தித்து ஒப்ப‌ந்த‌ம் செய்து கொண்டார். அது போரா ச‌மூக‌த்தின் ப‌ண‌ம், சொத்துக்க‌ளை பாதுகாப்ப‌த‌ற்காக‌ இந்துத்துவா பாஸிஸ்டுக‌ளுட‌ன் செய்து கொள்ள‌ப் ப‌ட்ட‌ ச‌மாதான‌ உட‌ன்ப‌டிக்கை.

- போரா முஸ்லிம்க‌ள் வ‌ர்த்த‌க‌த்தில் சிற‌ந்து விள‌ங்குவ‌தால் அவ‌ர்க‌ளில் ப‌ல‌ர் ப‌ண‌க்கார‌ர்க‌ளாக‌ உள்ள‌ன‌ர். அவ‌ர்க‌ள் த‌ம‌து செல்வ‌த்தை ச‌மூக‌த்திற்குள் ம‌ட்டுமே செல‌விடுவ‌தால், போரா ச‌மூக‌த்தில் ம‌ற்ற‌வ‌ர்க‌ளும் வ‌ச‌தியாக‌ வாழ்கின்ற‌ன‌ர்.

- அத்த‌கைய‌ செல்வாக்கு மிக்க‌ போரா முஸ்லிம்க‌ளின் வ‌ருடாந்த‌ ம‌காநாடு இம்முறை இல‌ங்கையில், கொழும்பில் ந‌டைபெறுகிற‌து. இத‌ற்காக‌ கொழும்பில் உள்ள ந‌ட்ச‌த்திர‌ த‌ங்குவிடுதிக‌ள் முன்கூட்டியே ப‌திவு செய்ய‌ப் ப‌ட்ட‌ன‌. ஈஸ்ட‌ர் தாக்குத‌லுக்கு பிற‌கு வெறுமையாக‌ இருந்த‌ ஹொட்டேல் அறைக‌ள் திடீரென‌ நிர‌ம்பி வ‌ழிந்த‌ன‌.

- இல‌ங்கையில் இத்த‌கைய‌ நிக‌ழ்வு ந‌ட‌ப்ப‌து சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் என்ப‌தால் சிறில‌ங்கா பேரின‌வாத‌ அர‌சும் ஒத்துழைக்கிற‌து. போரா ம‌காநாடு எந்த‌ப் பிர‌ச்சினையும் இல்லாம‌ல் ந‌ட‌ப்ப‌த‌ற்காக‌ பாதுகாப்பு ப‌ல‌ப் ப‌டுத்த‌ப் ப‌ட்டுள்ள‌து. ப‌ண‌ம் என்றால் பிண‌மும் வாய் திற‌க்கும் என்றொரு ப‌ழ‌மொழி உண்டு. ப‌ண‌ம் என்றால் இன‌வாத‌ப் பேயும் வாய் மூடும்.

Kalai Marx

10 கருத்துரைகள்:

ippa entuku ippa pathu porama paduringa (kevalapadutringa)
ongalta enna sari ketu vandana avan avan patula thaan ierikiran
ongaluku oru karachalum traillaye appa vaya mudikonduirnga
(OLUNGANA MUSLIM ADUTAVANA PATI PESA MATAN AND THINK PANA KOODA MATAN ) MUNAFIK AVAMA NALLAOLUKAMNA MUSLIM SAMUGAMA IRINGA

Sunni Muslim has failed to respond to Shia threats in many ways.. Salafi or Wahabi has failed this

இதுபோக போராக்களை (பஹரா) பெரும்பான்மை ஷீயாக்களே ஏற்றுக்கொள்வதில்லை. இவர்களது மூதாதயர்கள் ஈரான் வம்சாவளி யூதர்கள் அல்லது ஆரிய யூத கலப்பு என்றும், இவர்கள் எங்கு இருந்தபோதும் அங்கு ஆட்சியில் இருக்கும் மதம், கொள்கைக்கு விசுவாசமாக இருப்பவர்கள் போன்று தம்மை மாற்றிக்கொண்டு உயர் பதவிகள் பெற்று தமது இனத்தூய்மையை பேணிக்கொள்வர். இவர்கள் போன்றே ஆரிய சிக்ப(ஹ)வன் பார்பனர்களும் தமது அடையாளத்தை பாதுகாத்து வருகின்றனர். இவர்கள் அனைவரினதும் (ஆரியம் + பண்டைய யூத பார்சிக்கள்) ஒத்தபன்பு, தமது இனத்தூய்மையை பேனும்விதமான எந்த ஒரு கொள்கையையும் அதற்குரிய நிலத்தையும் நோக்கி தம்மை நகர்த்திக்கொள்வதுதான். இந்திய சுதந்திரத்தின் பின்னர்"டொக்டர் அம்பேத்கர்" தலைமையிலான குழுவின் யாப்பு முன்வைக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட போது, எவ்வாறு கடும்போக்கு பார்ப்பனர்கள் அமேரிக்கா மற்றும் இஸ்ரேல், கிழக்கு ஐரோப்பா போன்ற பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து தமது தனித்துவத்தை பேண முனைந்தார்களோ அதே போல் இந்த இனக்குழுவும் இஸ்லாமிய சுன்னி கிலாபத்தில் இருந்து இடம்பெயர்ந்து கொண்டே இருந்தனர். ஈரானில் மேற்க்கொள்ப்பட்ட மக்கள் புரட்சி, பிரான்சின் உளவாளி "குமைனியினால்" திருடப்பட்டு பிரான்சுடன் ஏலவே எட்டப்பட்ட உடன்பாட்டிற்க்கு அமைய (சுன்னிக்களுக்கு எதிரான) அகண்ட பாரசீகம், ஷீயா இராட்சியம்
மற்றும் "விலாயதுல் பஹீஃ" கோட்ப்பாடு என்பன முன்வைக்கப்பட்ட போது, போராக்கள் தமக்கு மிக பாதுகாப்பான இடமாக இந்தியாவை நிலை நிறுத்திக்கொண்டார்கள். அரசியல் மற்றும் சமூக ரீதியாக இவர்கள் தம்மை ஹிந்துதுவாவுடன் உடன்பட்டவர்களாக காட்டிக்கொள்ளவே விரும்புகின்றனர். அதே போன்று ஹிந்துதுவா கூட இவர்களை இஸ்லாமிய அடயாளம்கொண்டு பார்ப்பதில்லை. அமித் ஷா வின் மருமகனாக இருக்கும் "அப்பாஸ் நக்வி" கூட ஒரு போரா என்று உறுதிப்படுத்தப்படாத தகவல் உண்டு. போராக்கள் "மதப்பரப்புரை" மூலம் தமது மத கருத்தை பரப்புவதில்லை என்பது, அவர்களது பின்புலம் பற்றி அறிந்து கொள்ள போதுமான சிறந்த ஆதாரமாகும்.

போரா என்பது முஸ்லிம்கள் அல்ல..ஷீஆ போராக்கல் என அழையுங்கள்

போராக்கள் முஸ்லிம்கள் அல்ல, ஏனெனில் இவர்கள் ISiS யில் இணைவதில்லை

எது எப்படியோ , அவர்கள் சுன்னிக்கள் போல பயங்கரவாத மற்றும் குற்ற செயல்களில் ஈடுபடுவதில்லை . அந்த வகையில் பாராட்டப்படவேண்டியவர்கள் .

கத்துற அஜன்-குமாருக்கு காரணம் எதற்கு தன் நிழல் பார்த்து தானே குரைக்கும். பாக்கிஸ்தான் விமானப்படை கடற் புலிகளை அழித்தொழித்து சரிதான். உலகம் அழியும் வரைக்கும் ஈழம் கனவாகத்தான் இருக்கும்.

குமாரைத் தவிர மற்ற இங்கு கருத்துத் தெரிவித்த அத்தனை பேரும் போராக்களைத் தாழ்ந்தி குறிப்பாக இங்கு கருத்துத் தெரிவிப்பவர்கள் சுவர்க்கவாதிகள் எனவும் போராக்கள் அனைவரும் சுவர்க்கத்தில் நுழையமாட்டார்கள் என்ற கருத்து தான் மேலோங்கிக் காணப்படுகின்றது. இது ஒரு புதுமையான கீழ்த்தரமான சிந்தனைப் போக்கு,உண்மை முஸ்லிம்கள் இத்தகைய குறுகிய சிந்தனைகளை ஏற்றுக் கொள்வதில்லை. ஆதமுடைய மக்கள் அனைவரும் ஒரே குடும்பத்தவர்கள்,என அல்குர்ஆன் பிரஸ்தாபிக்கும் போது அந்த குடும்பத்தில் எல்லா நம்பிக்ைகயாளர்களும் ஏன் இறை விசுவாசமற்ற நாஸ்திகர்களும் உள்வாங்கப்படுகின்றனர்.கடந்த சுமார் எட்டு வருடங்களாக இத்தகைய ஒரு நாஸ்திக வாதியுடன் நான் கொடுக்கல் வாங்கல் செய்து வருகின்றேன். ஒரு கணப்பொழுதும் அவர் எனக்குத் துரோகம் செய்தது கிடையாது. அவ்வாறு செய்வார் என நாம் ஒருபோதும் நம்புவதுமில்லை. அவ்வளவுக்கும் அவர் இறைநம்பிக்ைக இல்லாதவர். ஆனால் துரதிருஷ்டவசமாக நான் அதே கொடுக்கல் வாங்கல்களை ஐந்து நேரமும் தொழுது நான் முஸ்லிம் என மார்தட்டிக் கொண்டிருப்பவருடன் ஒருசில வருடங்கள் கொடுக்கல் வாங்கல் செய்து கோடிக் கணக்கில் எனது சொத்தைச் சூறையாடி இப்போது ஒழிந்து இருக்கின்றார். இந்த போராக்கள் உலசில் சிறந்த சர்வதேச வர்த்தகர்கள். அவர்களிடம் உள்ள நல்லவற்றை முடிந்தால் கற்றுக் கொள்வது தவிர அவர்களை மத ரீதியாகவோ, சாதி ரீதியாக வோ விமர்சிக்கும், அவர்களை மட்டம் தட்டும் மனப்பாங்கு தான் இந்த நாட்டில் உள்ள முஸ்லிம் என பெருமைப்படும் இனத்தாரிடையே உள்ள மனநோய். இந்த நோய்க்கு உலகில் எங்கும் மருந்து இல்லை. துரதிருஷ்டவசமாக இந்த நாட்டில் வாழும் பெரும்பான்மையான சோனகரிடத்தில் இந்த நோய் பரவிக்காணப்படுகின்றது. அவர்களுடைய மனதில் உள்ள இந்த நோய்க்கு அவர்களே பரிகாரம் செய்து அவர்களை மாற்றிக் கொள்ளாதவரை அல்லாஹ் நிச்சியமாக மாற்ற அல்லது குணப்படுத்த மாட்டான் என அல்குர்ஆனில் கூறுகின்றான்.

Muralitharan said his own opinion (may be right or wrong).
Ajan do you agree with Murali?
See how people are shouting against our Kandyan? Supporting to the biggest terrorist who killed (responsible) lakhs of Srilankans including Rajiv Gandhi

உள்ளத்தை பார்ப்பவன் இறைவன் சுவர்க்கம் நரகம் தீர்மானிக்க நீ யார். ..சுன்னத்ஜமாஅத் திலே இல்லாத பிரிவுகளாக தப்லீக் தவ்ஹீத் இடையில் சண்டை வரவில்லை யா? மையத்தை அடக்கவிடாமல் வந்த சண்டை யில் பாதிக்கப்பட்ட து முஸ்லீமல்லையா ?இன்று ம் கூட உலமாசபையை ஒரு இயக்கத்தின்பிடியில் தானே வைத்திருக்கிறார் கள். ...காட்டி கொடுத்து பலி தீர்ப்பு ம் போராக்கள் செய்வதில்லை பிச்சை காரர்கள் இல்லாத ஒரு சமூகம் போரக்கள்அலர்களிடம் நாம் கற்றுக் கொள்ள நிறைய அகுலாக்குகள் நிறைய இருக்கிறது ...

Post a Comment