Header Ads



“கசோக்கி கொலை நடந்தது எனது மேற்பார்வையில்தான்” பொறுப்பேற்வதாக சவூதி இளவரசர் அறிவிப்பு

பத்திரிக்கையாளர் ஜமால் கசோக்கியின் மரணத்துக்கு தானே பொறுப்பு என்று சவூதி அரேபிய முடிக்குரிய இளவரசர், பேட்டி ஒன்றில் ஒப்புக் கொண்டுள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த பத்திரிக்கையாளரும், சவூதி அரசு குடும்பத்தினரின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்து வந்தவருமான ஜமால் கசோக்கி துருக்கியில் உள்ள சவூதி துணைத் தூதரகத்தில் வைத்து கொடூரமாகக் கொல்லப்பட்டார்.

இச்சம்பவம் நடந்து வரும் ஒக்டோபருடன் ஓராண்டு ஆகும் நிலையில் அமெரிக்க பொது ஒலிபரப்புத் துறை சார்பில் ஆவணப்படம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் சவூதி அரேபிய முடிக்குரிய இளவரசர் முஹமது பின் சல்மான், தனது மேற்பார்வையில் நடந்ததால் கசோக்கி மரணத்துக்கு தானே பொறுப்பு எனக் கூறுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

முதலில் கசோக்கி கொலையை மறுத்து வந்த சவூதி, பின் தங்கள் நாட்டின் தூதரகத்தில் தான் கொலை நடந்தததாக ஒப்புக் கொண்டது. ஆனால், முடிக்குரிய இளவரசர் முஹமது பின் சல்மான் தான் அந்தப் படுகொலைக்கு உத்தரவிட்டார் என்பதை மறுத்து வந்தது. இந்நிலையில் முதன்முறையாக பேட்டி ஒன்றில் தானே பொறுப்பு என்று முஹமது பின் சல்மான் ஒப்புக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

5 comments:

  1. உடனே அவரைப் பிடித்து துருக்கி அரசாங்கத்திடம் ஒப்படைத்தால் சட்டத்தை அவர்கள் உரிய முறையில் செய்வார்கள். அந்த பணியை செய்யுமாறு ஐ.நா. பாதுகாப்புச் சபையிடம் நாம்வேண்டிக்கொள்கின்றோம்.

    ReplyDelete
  2. This not what MBS said! He said said that he, as a commander and chief, cannot reign in every single person under his command when a million people are working under him, but he will take full responsibility for the rogue elements under his watch who committed this murder! This is a very calculated statement to shrug off the media from his back!

    ReplyDelete
  3. சவூதியை நாசமாக்குகின்ற இந்த சல்மானைத் தூக்கில் இடுவதே சவுதியைக் காப்பாற்ற வழியாகும்.

    ReplyDelete
  4. He should Beheaded infront of public.

    ReplyDelete
  5. அப்பாவி ரிஸானாவைக்கொன்ற ஷரீயா சட்டத்தை கேலிக் கூத்தாக வேண்டாம் ..இவனையும் கொள்ள வேண்டாமா. ..சவுதி அரேபியாவில் ஷரீயா வின் பெயரால் சர்வாதிகாரம். ..

    ReplyDelete

Powered by Blogger.