Header Ads



ரணில் - சஜித் இணைந்து கோத்தபாயவை பெற்றி பெறச்செய்ய முயற்சிக்கிறார்களோ..?

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள நிலைமையானது பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான கோத்தபாய ராஜபக்சவுக்கு சாதகமாக அமையும் என ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவும் சஜித் பிரேமதாசவும் இணைந்து கோத்தபாய ராஜபக்சவை பெற்றி செய்யும் ஒப்பந்தம் ஒன்றை நிறைவேற்றி வருகிறார்களோ என எண்ண தோன்றுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மாதிவெல பிரதேசத்தில் தனது இல்லத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

ரணில் விக்ரமசிங்க இதற்கு முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியை சேராதவர்களுக்கு ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு வழங்கினார். இதனால், சஜித் பிரேமதாசவுக்கு அந்த வாய்ப்பை வழங்காமல் இருக்க காணரங்கள் இல்லை.

அதேபோல் சஜித் பிரேமதாசவும் வயது மற்றும் அனுபவத்திற்கு மரியாதை கொடுத்து ரணில் விக்ரமசிங்கவுக்கு எந்த தொந்தரவையும் கொடுக்காது மெதுவாக வேட்புமனுவை பெற்றுக்கொள்வது பொருத்தமானது எனவும் ரஞ்சன் ராமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

Powered by Blogger.