September 28, 2019

இஸ்லாத்தை எத்திவைக்காததை எண்ணி வெட்கித் தலைகுனிந்தேன் - கண்ணீர் மல்க கூறினார் ஹஜ்ஜுல் அக்பர்

27/09/2019 அஸர் தொழுதுவிட்டு இனாயதுல்லாஹ் நானாவின் டீயையும் ருசிபாத்துவிட்டு அனைவரும் தத்தமது வேலைகளை செய்துகொண்டிருந்தார்கள்... வெள்ளிக்கிழமை என்பதனால் வீடு செல்பவர்கள் அதற்கும் தயாராகிக்கொண்டிருந்தனர்..
அவசரமாக தாருல் ஈமானின் பணிபுரிகின்ற ஊழியர்கள் அனைவரையும் ஒன்றுகூடுமாறு அழைப்புவிடுக்கப்படுகின்றது... திடீரெனக் கூட்டப்பட்டதால் யாருக்கும் ஏன் எதற்கு என்ற காரணம் புரியவில்லை அனைவரும் வந்துசேர்ந்துவிட்டோம்... காரணம் அறிய ஒவ்வொருத்தருக்குள்ளும் குசுகுசுப்புக்கள்... உஸ்தாத் விடுவிக்கப்பட்டு தாருல் ஈமானுக்கு வந்துகொண்டிகின்றாங்களாம் செய்தி மெல்ல மெல்ல கசியத் தொடங்கியது ஒவ்வொருத்தர் முகத்திலும் ஓர் இனம்புரியாத சந்தோஷம்... ஜமாஅத்தின் மூத்த உறுப்பினர் ஒருவரால் உஸ்தாதின் வருகை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படுகின்றது. ஒன்பது பெருநாளை ஒன்றாகக் கொண்டாடியது போன்று ஒரு சந்தோஷம் அத் தருணத்தில்.
உஸ்தாதின் வருகை எதிர்பார்த்து தாருல் ஈமான் வாசலுக்கே சென்றுவிட்டோம்... ஒவ்வொரு நிமிடங்களும் வருடங்களாகவே நகரத்துவங்கின... வீதியால் வருகின்ற வாகனங்கள் ஒவ்வொன்றாய் ஸ்கேன் செய்யப்படுகின்றது... சிலர் வீதிக்கே சென்றுவிட்டார்கள்...
நீண்டதொரு காத்திருப்பின் பின் ஒரு குழந்தை தன் தாயை காணும் ஒரு சந்தோஷத்தோடு பெண்கள் பகுதி நஜீமுன் நிஸா தாத்தா தாருல் ஈமான் நோக்கி விரைந்து வருகின்றார் வாசலில் நின்றவர்களிடம் உஸ்தாத் வந்துட்டாங்களா??? என்ற வினாவோடு பெண்கள் பகுதி அறையில் நுழைந்து உஸ்தாதின் வருகைக்காக அவரும் காத்திருக்கின்றார்.
உஸ்தாத் எதுக்கு கைதுசெய்யப்பட்டார்கள்...? என்ற வினா ஒரு பக்கம் இருந்தாலும் உஸ்தாத் எப்படி இருப்பார்கள்...? அவர்கள் தோற்றத்தில் பேச்சில் மாற்றங்கள் இருக்குமா...? தடுப்புக் காவலில் எப்படி இருந்திருப்பார்கள்...? உணவு... தூக்கம் எல்லாம் எப்படி இருந்திருக்கும்...? இவ்வாறு பல கேள்விகள் ஒவ்வொருத்தரது புத்திக்குள்ளும் வந்துபோய்க்கொண்டிருந்தது...
வீதியில் இருந்த தாருல் ஈமான் வாயற்காவலாளியின் சைகைகள் உஸ்தாத் வருகின்றார்கள் என்பதனை தெரிவித்தது... பாதையில் வாகன நெரிசலாக இருந்ததால் அவை சீர் செய்யப்பட்டு வாகனம் தாருல் ஈமான் முன்னால் நிறுத்தப்படுகின்றது வைத்த கண் மாறாமல் அனைவரும் வாகனத்தையே பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்... வாகனத்திலிருந்து ஒவ்வொருத்தராக கீழிறங்குகிறார்கள்... அடுத்து உஸ்தாத் இறங்குவார்கள் அடுத்து உஸ்தாத் இறங்குவார்கள் என எதிர்பார்த்த எங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது அனைவரும் இறங்கிவிட்டார்கள் ஆனால் உஸ்தாத் அங்கு இல்லை.
உஸ்தாத் அடுத்த வாகனத்தில் வருகின்றார்களாம் என்ற செய்தி கிடைக்கப்பெற்று காத்திருப்பு நீடிக்கின்றது...
சுமார் மாலை ஐந்து மணி 14 நிமிடம் 43 வது செக்கன் இருக்கும் தாருல் ஈமான் முற்றத்தில் வாகனம் வந்து நிறுத்தப்பட அதே புன்னகையோடு உஸ்தாத் காறிலிருந்து இறங்குகின்றார்கள்... முன்னெதிரே நின்ற வாயற் காவல் நாநாவுக்கு முதலில் ஸலாம் கூறி கைலாகு செய்துகொண்டே படியேறினார்கள்... தோற்றத்தில் சிறிது வித்தியாசம் உடல் கொஞ்சம் மெலிந்து... முகம் சற்று கறுத்திருந்தது இதனைத் தவிர உஸ்தாதில் எந்தவொரு மாற்றத்தையும் எங்களால் கண்டுகொள்ள முடியவில்லை...
அவர்களது பாதங்கள்; எங்களுக்குக்கிடையிலான இடைவெளிகளை குறைத்துக்கொண்டே செல்ல கட்டுப்பாடிளந்து பலரது கண்களும் வியர்க்கத்துவங்கிவிட்டன... ஒவ்வொருத்தராய் கைலாகு செய்து முஆனாகா செய்த பின்னர் பெண்கள் பகுதி அறை வாயிலில் விம்மிய குரலோடு இரு சகோதரிகள் உஸ்தாதுக்கு முஹமன் கூறி வரவேற்க உஸ்தாதும் பதிலளித்து படியேறினார்கள்...
இவ்வளவு காத்திருப்புக்களும் கண்கசிவுகளும் எதுக்கு உஸ்தாத் என்ன தாருல் ஈமானுக்கு முதல் முறையா வருகின்றார்... இல்லை ஏதாவது மிகப்பெரிய பட்டம், பதவி பெற்று வருகின்றாரா...? இல்லையே சிறைக்குத்தானே போய் வருகின்றார் இதற்கு ஏன் இவ்வளவு பில்டப் என்று பலர் நினைக்கலாம்...
உஸ்தாத் அவர்களின் ஸலாத்தில் நனைந்து... சிந்தனையில் மிதந்து... கனிவான பேச்சுக்களாலும் பணிவான நடத்தையினாலும் கவரப்பட்டு... ஒரே மேசையில் உணவருந்தி... பக்கத்து சீட்டிலிருந்து பயணித்து...வார்த்தையிலும் வாழ்க்கையிலும் இஸ்லாத்தை மட்டுமே பார்த்தும் கேட்டும் படித்த ஒவ்வொரு உள்ளங்களுக்கும் உஸ்தாத் அவர்களின் வருகை ஒரு அலாதியான சந்தோஷம்தான் அவற்றை வார்த்தைகளால் வர்ணித்திட முடியாது. உஸ்தாத் அவர்கள் தாருல் ஈமான் ஊழியர்களது உள்ளங்களில் வாழ்ந்தார்கள் அவர்கள் இல்லாத 32 நாட்கள் தாருல் ஈமான் பரபரப்பாக இருந்தாலும் ஒவ்வொருவரது உள்ளங்களும் ஏதோவொரு வெறுமையை உணர்ந்து கொண்டுதான் இருந்தது... நீண்டதொரு காத்திருப்புக்குப் பின்னால் உஸ்தாத் அவர்களின் வருகை தாருல் ஈமான் ஊழியர்களுக்கு ஒரு கொண்டாட்டம்தான்.
கைலாகுகளும் முஆனகாவும் முடிந்து அனைவரும் கேட்போர்கூடத்தில் அமர்ந்துகொண்டோம்... அமீர் மற்றும் பொதுச் செயலளார் வலதும் இடதுமாக அமர நடுவில் உஸ்தாத் அமர்ந்துகொண்டார்கள்...
அமீர் உரையை ஆரம்பித்து... இது ஜமாஅத்திற்கும் உஸ்தாத்திற்கும் கிடைத்த ஒரு வெற்றியல்ல... அப்பால் நீதிக்கும் முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமைக்கும் கிடைத்த ஒரு வெற்றியாகும்... இச்சந்தர்ப்பத்தில் தஸ்பீஹோடும் இஸ்திஃபாரோடும் அல்லாஹ்வுக்கு நன்றிசெலுத்துகின்ற வேலையையே நாம் செய்யவேண்டும் என வலியுறுத்திக்கொண்டார்கள்...
எவ்வித குற்றமும் செய்யாமல் 32 நாட்கள் விசாரணைக் கூண்டுக்குள் இருந்து விடுதலை பெற்ற உஸ்தாத் அவர்களது கைக்கு ஒலிவாங்கி பரிமாறப்படுகின்றது...
அவர்களது பேச்சில்...
நான் கைதாகி கொழும்புக் குற்றப் புலனாய்வுத் துறையின் கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டவுடனே எனது மனோ நிலையை மாற்றிக் கொண்டேன். நான் இன்னும் எத்தனை நாட்கள் இங்கு இருக்கப் போகின்றேனோ தெரியவில்லை எனவே எனது குடும்பம் ஜமாஅத்தை மறந்து அந்த சூழலுக்கு என்னையும் எனது மனோநிலையையும் மாற்றிக்கொண்டேன்... எனது குடும்பத்தில் நான் இல்லாவிட்டால் நான் என்ன வேலையை செய்ய வேண்டுமோ அந்த வேலையை எனது பிள்ளைகள் செய்வார்கள் என்ற நம்பிக்கையும் நான் இல்லாவிட்டாலும் என்னால் நடக்க வேண்டிய பணியை ஜமாஅத் முன்னெடுக்கும் என்ற நம்பிக்கையும் எனக்கு இருந்தது அதனால் நான் குடும்பத்தைப் பற்றியோ ஜமாஅத்தைப் பற்றியோ கவலைப்படவில்லை...
என்னை விசாரிக்க வருகின்ற ஒவ்வொருவருடனும் நல்ல முறையில் பேசினேன் அவர்களுக்கு எந்த வகையிலும் ஒரு கஷ்டத்தை கொடுத்துவிடக்கூடாது என்று ஒரு நிய்யத்தை வைத்துக் கொண்டு அவர்களது விசாரணைக்கு பூரண ஒத்துழைப்புக்களை வழங்கினேன்... என்னை யாரும் அடிக்கைவில்லை... ஏசவில்லை... என்னோடு ஆரம்பத்தில் கடுமையாக விசாரணை நடத்தியவர்கள் கூட பின்னர் சிறந்த முறையிலேயே நடந்துகொண்டனர்... அவர்களுக்கு என்னால் முடியுமானவரை இஸ்லாத்தைப் பற்றியும் முஸ்லிம் சமூகத்தைப் பற்றியும் தெளிவுபடுத்தினேன்...
இவ்வாறு அவர்களோடு பேசிப் பழகிய ஒரு கட்டத்தில் நான் வெட்கித் தலைகுனிந்தேன் இவ்வளவு காலம் அந்த சமூகத்தினருக்கு எமது சமூகத்தைப் பற்றியும் எமது மார்க்கத்தைப் பற்றியும் சரியாக எடுத்துச் சொல்லவில்லையே என்று கண்ணீர் மல்க குறிப்பிட்டார்கள்...
என்னோடு அநியாயமாகக் கைதுசெய்யப்பட்ட பலரும் சிறையில் இருந்தார்கள் அவர்கள் தாங்கள் அநியாயமாகக் கைதுசெய்யப்பட்டதை எண்ணி கவலைப்பட்டுக்கொண்டிருந்தார்கள். நான் அவ்வாறு கவலைப்படவில்லை. நான் இவ்வாறு சிறைக்குச் செல்லவேண்டும் என்பது அல்லாஹ்வின் கத்ரில் இருந்திருக்கிறது அதனால் சென்றிருக்கின்றேன் எனவே அதில் ஒரு நலவு இருக்கும் என்ற எண்ணத்திலே எனது நடவடிக்கைகளை மேற்கொண்டேன்...
நான் விடுதலையாகியது ஒரு பக்கம் சந்தோஷமாக இருந்தாலும் இன்னொரு பக்கம் கவலையாகவும் இருக்கின்றது காரணம் இவ்வளவு காலமும் நான் பல மனிதர்களோடு இருந்திருக்கின்றேன் இருந்தும் இந்த 32 நாள் இருந்த அனுபவம் வித்தியாசமானது மட்டுமல்லாது அதுதான் தேவையானதும் கூட அது இன்று இல்லாததை இட்டுக் கவலையடைகின்றேன்.
அங்கு என்னோடு இருந்தவர்களுள் நானே வயதில் மூத்தவர் அனைவரும் என்னோடு நன்றாகவே நடந்து கொண்டனர் என்னை அவர்கள் எந்த வேலையும் செய்யவிடுவதில்லை... என உஸ்தாதின் அனுபவங்கள் பரிமாறப்பட்டது. உஸ்தாத் அவர்களின் வார்த்தைகளில் பல விடயங்கள் இருந்தன படிப்பினை பெறுவதற்கு.
இறுதியாக உஸ்தாதின் மூத்த மகனுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படுகின்றது...
எங்களைப் பொறுத்தமட்டில் குடும்பம், ஜமாஅத் இரண்டுமே ஒன்றுதான் அதனால் ஜமாஅத்திற்கு நன்றிசொல்வதென்பது சொந்த வீட்டுத் திருமணத்திற்கு நாங்களே அழைப்பிதழ் வழங்குவது போன்றது என ஆரம்பித்து இதற்காக உழைத்த அத்தனை உள்ளங்களுக்கும் குடும்பம் சார்பாகவும் ஜமாஅத் சார்பாகவும் மனதார நன்றி கூறி முடித்துக்கொண்டார்...
மீண்டும் அனைவரோடும் கைலாகு செய்து கொண்டு விடைபெறும் போது இப்போதுதான் தனக்கு செய்தி கிடைத்ததென பெண்கள் பகுதியின் மற்றுமொரு சகோதரி அங்கே உஸ்தாத் அவர்களை காண காத்திருந்தார் அவருக்கும் முஹமன் கூறிக்கொண்டு புறப்படும் சந்தர்ப்பத்தில் புத்தகக் கண்காட்சிக்காக BMICH வாயில் வரைச் சென்றிருந்த பௌஸர் நாநாவும் உஸ்தாதின் வருகை கேட்டு தனது பயணத்தை பாதியிலே இடை நிறுத்திவிட்டு பலத்த வாகன நெரிசலுக்கு மத்தியில் ஆட்டோ பிடித்து அங்கு வந்து சேர்ந்துவிட்டார் இவ்வாறு உஸ்தாதின் வருகை செய்தி கேட்டு தாருல் ஈமான் நோக்கி ஓடோடி வந்த ஜமாஅத்தின் ஆண் பெண் ஊழியர்கள் அனைவருக்கும் தன் புன்னகையாலும் இனிய வார்த்தைகளாலும் மகிழ்வூட்டி... உஸ்தாத் அவர்கள் தனது குடும்பத்தை சந்திக்கப் புறப்பட்டார்கள்...
மீண்டும்... மீண்டும்...
உஸ்தாதின் இமாமத்தின் கீழ் நின்று தொழ...
உஸ்தாதின் சிந்தனைகளை டைப் செய்ய...
உஸ்தாதின் உரைகளை வீடியோ செய்ய...
உஸ்தாதின் கட்டுரைகளை நூலுருப்படுத்த...
புதியதொரு புத்துணர்ச்சியோடு அவற்றை தேசியமயப்படுத்த...
32 நாட்களாக இருண்டிருந்த உஸ்தாதின் காரியாலய அறை நாளை முதல் ஒளிபெறப்போகின்றது என்ற நம்பிக்கையோடு... நாளைய விடியலுக்காய் நாங்களும் காத்திருக்கின்றோம் தாருல் ஈமான் ஊழியர்களாய்...
சஜீர் முஹைதீன்

8 கருத்துரைகள்:

His detention must give many lessons for Sri Lankan Muslim community. Our Islamic dawa workers, community leaders and Islamic clerics all must learn some lessons from his detention. There is no doubt this detention is unjust and unwanted. There must have been some insiders to give wrong information about Muslim community leaders and Muslim clerics for some personal or ideological differences.Moreover, Islamic groups all of them must take some lessons from this. what about so called moderate Islamic groups. Will they learn some lessons from this. For petty personal differences these moderate Islamic groups are divided. So called Jamathe-Islami, Salama, Miskath and some other similar Islamic groups have done a greater Mistake in Sri Lankan dawa history. They have good intention and I do not doubt about their sincerity and about their good knowledge about on Islam and yet, ego of these each group does not let them to work in unison in Sri Lanka. what is more pathetic about these group is each one of them has been showing off their talent and skills (competing one another in good and bad ways for a long time) I do not talk about Salafi groups. We all know about them. But all these moderate groups have been undercutting one another. Their personal ego and personal internal disputes have done a greater damage to Islamic dawa in Sri Lanka. We all have been fighting internally while forgetting our greater duty of Dawa to non-Muslim community. Now. 95% of Non-Muslims: Sinhalese, Tamils and Christians got wrong impression about Islam: all these moderate groups with all their knowledge and skills have been focusing in their internal ideological disputes and protecting their egoistic dawa works. ( promoting group's ideology, group culture,promoting each group, helping each group members, creating group circles, publishing group's literature, protecting group's interests, collecting money for group's promotion. This group culture has grown to a greater dangerous levels, even some do not invite other group people for wedding or some other functions, even some do not say Salam too. sometime this internal resentment and grudge have done into extreme levels. I can give some examples too. A group people do not like to read Group's Islamic literature as if they talk some thing alien to Islam. I can not narrate many stories and tell many narratives about this. This has been going on for many years within us at the expense of our main duty in Sri Lanka. That is why I'm reminding you all that our priority in Sri Lanka got wrong? instead of showing the peaceful message of Islam to all non-Muslim communities, we begun to fight one another and sometime show off one another. Each group thinks that it is better than others. It is wiser than others. it is stronger than others. I do not blame Sinhalese community at all. there are only tiny group of extremists but 90% of them are good but we have started to fight one another in the name of Islam. now, we reap the consequence. I hope to write a detailed article about this. I hope I have given some signals to all these 3 moderate groups to come to table and forget about their ego and work for the good course of Islam and Muslim community in Sri Lanka. I know they have potentiality and skills to reach out and yet disunity among them cost a lot in dawa. They have wasted money, time and energy in this disunity. our resources and manpower are limited in Sri Lanka in dawa. what if we are disunited.. sometime, I notice that some of repeated programs and talks for the sake of competition. Sometime, our money and wealth are wasted with good intention. I hope this detention opens the eyes of all these groups and put last nail to the box of ego in each group.

It is pretty interest and of course more happy to read the above passage which is nothing but truth, I am much more happy that the core issue of the community is diagnosed at least by now by one of the members of the community,al Quran very precisely mentioned this truth 1400 years ago it says ' كل حزب بما لديهم فرحون each sect exulting in its tenets, I sincerely thank brother who has come out with the true diagnose and we being Muslims mush get ourselves involved in thinking,acting and of course helping others in the true sense of Iman, which is perhaps the way Prophet (Sal)and his beloved companions performed.

Alhamdu Lillah. Islamic organisations should have connections with security departments of the country. They should invite security officers for any get-together for creating harmony among communities.

ALLAH YAHFALAK YA USTHATH IAM IHSAN CASSIM (SALAFY)

நல்ல முஸ்லிம் எவராலும் வாசிக்க முடிந்த சிறந்த புத்தகம்...

Post a comment