Header Ads



சஜித் ஜனாதிபதியானால், மைத்திரி பிரதமராக நியமிக்கப்படுவாரா...?

சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக பதவிக்கு வந்தால், மைத்திரிபால சிறிசேன, பிரதமராக நியமிக்கப்படுவார் என்ற பொய்ப் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்தின் கீழ் எந்த வகையிலும் மைத்திரிபால சிறிசேன பிரதமராக நியமிக்கப்பட மாட்டார் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.

கம்பெரலிய வேலைத்திட்டத்தின் கீழ் கொலன்னாவை பிரதேசத்தில் அபிவிருத்தி செய்யப்பட்ட குறுக்கு வீதிகளை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

20 ஆண்டுகளுக்கு பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதியை தெரிவு செய்து, எமது கட்சியின் பிரதமரை நியமிப்போம்.

சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக பதவிக்கு வந்தால், மைத்திரிபால சிறிசேனவை பிரதமராக நியமிப்பார் என கட்சியினர் சிலர் தேவையற்ற அச்சத்தை உருவாக்கிக்கொண்டுள்ளனர்.

அப்படி எதுவும் நடக்காது. ஐக்கிய தேசியக் கட்சியினரில் 99 வீதமாவர்கள் மைத்திரிபால சிறிசேனவுடன் கோபத்தில் இருக்கின்றனர். இதனால், வீணான அச்சத்தை ஏற்பத்தி சிறிய சூழ்ச்சியை செய்ய முயற்சித்து வருகின்றனர். சில ஊடகங்கள் வெளியிடும் பொய்யான செய்திகளை நம்பி புத்திசாலிகள் ஏமாற மாட்டார்கள்.

அதேவேளை மாகாண சபைத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளமைக்கு குறித்து ஜனாதிபதி எம்மீது குற்றம் சுமத்துகிறார். ஜனாதிபதி ஐக்கிய தேசியக் கட்சியினரின் தோளில் ஏறி ஆட்சிக்கு வந்து, ஐக்கிய தேசியக் கட்சியினரை நோகடிக்கும் வேலைகளை செய்தார் என்பதை மறந்து விட்டார்.

நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தியிருந்தால், அதிக இடங்களை ஐக்கிய தேசியக் கட்சியே கைப்பற்றியிருக்கும்.

எனினும் அப்படி செய்ய இடமளிக்கவில்லை. அதிகமாக நோகடித்தவர், இறுதி நேரத்திலும் நோகடிக்கவே பார்க்கின்றார். விளக்கு ஒன்று அணைய போகும் தருவாயில் மிகவும் வெளிச்சமாக எரியும். இதனால், ஜனாதிபதியின் கனவு கதைகள் இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே எனவும் மரிக்கார் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.