Header Ads



நிதியமைச்சை என்னிடம் தாருங்கள், நாட்டில் நிதி நெருக்கடி இருக்காது . தயா

தன்னிடம் நிதி அமைச்சை ஒப்படைத்தால் நாட்டில் நிதி நெருக்கடி இருக்காது என அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார். 

தற்போதைய நிதி அமைச்சு பயனற்றது என குற்றம் சுமத்திய அவர், எனவே தன்னிடம் நிதி அமைச்சு ஒப்படைக்கப்பட்டால் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தி காட்டுவதாகவும் அவர் கூறினார். 

5 ஆயிரம் சமுர்த்தி மேம்பாட்டு அதிகாரிகளுக்கு நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு இன்று (15) அலரி மாளிகையில் நடைபெற்றது. 

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார். 

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், தான் ஒரு போதும் நிதியில்லை என கூறி வேலை செய்யாமல் விட்டதில்லை எனவும் குறிப்பிட்டார். 

நிதியை தேடுவதில் உள்ள சிரமங்களை நன்கறிந்துள்ளதால், பணத்தை வீணாக செலவழிக்க போவதில்லை எனவும் அவர் கூறினார். 

இந்த நியமனம் வழங்கும் நிகழ்வில் அமைச்சர்களான வஜிர அபேவர்தன, பி. ஹாரிசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

1 comment:

  1. பதவியை ஆசையுடன் கேட்பவர் பற்றி நபி(ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்தார்கள். பதவியைக் கேட்பவர்களுக்கு அதை வழங்கவேண்டாம், அப்போது பதவியை துஷ்பிரயோகம் செய்யும் வாய்ப்பு அதிகம். இந்த வகையில் திரை மறைவில் இயங்கும் இனத்துவேசத்தின் தந்தை என மதிப்பீடுசெய்யப்பட்ட ஒருவருக்கு நாட்டின் திறைசேரியையும் அனுமதிக்கும் அதிகாரத்தையும் வழங்கினால் இந்த நாட்டில் வாழும் சிறு பான்மையினரான தமிழர்கள்,முஸ்லிம்களின் நிலைமை மண்ணைக் கவ்வ வேண்டியது மட்டும்தான்.

    ReplyDelete

Powered by Blogger.