Header Ads



நாம் ஆட்சிக்கு வந்தால், அரசியல்வாதிகளை கல்லெறிய வைப்போம் - அநுரகுமார

இலங்கையில் 72 வருட காலமாக வீணாக்கப்பட்ட நாட்டை புதிய நாடாக கட்டி எழுப்ப ஆட்சி பலத்தை தேசிய மக்கள் சக்திக்கு வழங்குகள் என்று அழைப்பு விடுப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளருமான அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார். 

ஹட்டனில் இன்று (22) இடம்பெற்ற மக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவித்ததாவது, இலங்கை அரசு இதுவரை காலமும் தனவாதிகளின் அரசாக செயல்பட்டது இதை முடிவுக்கு கொண்டு வந்து உழைப்பாளர்களின் உணர்வு புரிந்த அரசாக நாம் மாற்றி காட்டுவோம். 

நாட்டை எதிர்காலத்தில் கட்டியெழுப்ப கூடிய பணம் உள்ளது. வெளிநாட்டு கடன்களையும் அடைத்து நாட்டை கட்டியெழுப்ப கூடிய வசதியும் உள்ளது. பணம் வேறு எங்கும் இல்லை. நமது நாட்டு அரசியல்வாதிகள் சிலரின் வீடுகளிலேயே இருக்கின்றது. அதேபொன்று இதுவரை காலமும் இந்த நாட்டின் மக்களுடைய பொது சொத்துகளையும் சூரையாடி வாழ்ந்த அரசாங்கங்களுக்கு முற்றுப்புள்ளி இட்டு தமது உழைப்புக்கு அப்பால் மேலதிகமான சொத்துகளை வைத்திருப்பவர்களிடமிருந்து அதைகளை மீட்டு அதனை மக்கள் சொத்தாக மாற்றி புதிய ஆட்சியை கொண்டு செலுத்துவோம் என தெரிவித்தார். 

குடும்ப ஆட்சிகளுக்கு இடங்கொடுக்காதும் ஊழல் நிறைந்த ஆட்சிகளுக்கு இடங்கொடுக்காதும் புதிய அரசாங்கம் ஒன்றை உருவாக்குவதில் மக்கள் சக்திக்கு மக்கள் ஆதரவு வழங்க வேண்டும். 

இந்த நாட்டில் மலையக தோட்ட தொழிலாளர்களுக்கு அவர்களுக்கு உரிய கலாச்சாரம், சாகித்தியம் ஆகியவற்றை உரிமையாக கொண்டு செல்ல முடியாமல் அதிலிருந்து விடுப்பட்டவர்களாக 150 வருட காலமாக அவர்களை மாற்ற முடியாமல் சிக்கி தவிக்கும் நிலையை உருவாக்கிய அரசியலுக்கு அப்பால் மலையக பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதாரத்தை கலை, கலாச்சாரத்தை ஏனைய சமூகத்தினரை போன்ற உரிமைகளை கௌரவமாக வழங்கி பாதுகாக்கும் அரசாங்கத்தை நாம் உருவாக்கி காட்டுவோம். 

தோட்ட தொழிலாளர் பிள்ளைகள் என்றால் கொழும்பில் ஹோட்டல் வேலைகளுக்கும், வீட்டு வேலைகளுக்கும் அங்குள்ள விடுதிகளை கவனிப்பதற்கும் ஈடுப்படுத்த முடியும் என்று நினைத்து வாழ்கின்றனர். அவ்வாறு அல்ல இவர்களுக்கு சமூக உரிமை அவசியமாக காணப்படுகின்றது. அதனை நாம் உருவாக்குவதற்கு அதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்போம். 

இந்த நாட்டை போதை வஸ்த்து ஒரு புறமாக ஆட்டி வைக்கும் இக்காலபகுதியில் இளைஞர்கள் அதற்கு அடிமையாகி வருகின்றனர். 

நுவரெலியாவிலும், கொழும்பிலும் போதைப்பொருள் தயாரிப்பது இல்லை. இருப்பினும் இலங்கைக்கு போதைப்பொருள் எங்கிருந்து வருகின்றது. கடல் மார்க்கமாக, ஆகாய மார்க்கமாக கொழும்புக்கும், பிரதான நகரங்களை இலக்குவைத்து பிரதேசங்களுக்கும் கொண்டு வரப்படுகின்றது. இதன் பின்னணியில் அரசாங்கம் செயல்படுகின்றது. 

போதைப்பொருள் வியாபாரிகளை அரசாங்கமும் அரசியல்வாதிகளுமே ஊக்கப்படுத்துகின்றனர். இவ்வாறு இருக்கும் பொழுது இதை எவ்வாறு ஒழித்தழிக்க முடியும். என்னிடம் இதனை இல்லாதொழிக்க திட்டம் இருக்கின்றது. எமக்கு பலத்தை தாருங்கள் நாம் இல்லாதொழிப்போம். 

சிங்கள, தமிழ், முஸ்லிம் ஆகிய மக்கள் யாருக்கும் மொழி வேறுபாடு காட்டுவதற்கு சொந்தம் கொண்டாட முடியாது. அவரவர்களின் உரிமைகளை அவர்கள் பின்பற்றுகின்றனர். ஆனால் அரசியல்வாதிகள் சிலர் அமைச்சரவைகளில் ஒன்றாக இருந்து கொண்டாலும், அவர்களின் அரசியல் நோக்கங்களுக்காக இனங்களுக்கிடையில் வேறுபாடுகளை உருவாக்குகின்றனர். 

இவ்வாறானவர்களால் இனங்களுக்கிடையிலும், மதங்களுடையிலும் குழப்பங்கள் ஏற்படுத்தி பொது மக்கள் கல்லெறிந்து கொள்கின்றனர். 

நாம் ஆட்சிக்கு வந்தால் முதலில் அரசியல்வாதிகளை காலி முகத்திடலுக்கு அழைத்து சென்று இன மத வேறுபாடுகளுக்காக அவர்களை கல்லெறிய செய்ய வைப்போம். அவர்கள் எரிந்து கொண்டால் பார்க்கலாம். 

நாட்டின் வளங்களை சூரையாடும் சக்திகளுக்கு நாம் இடங்கொடுக்க போவதில்லை. அண்மையில் தாமரை மொட்டு மலர்ந்தது. அங்கு 200 கோடி ரூபாய் ஊழல் ஏற்பட்டதாக ஜனாதிபதி கருத்து தெரிவித்தார். 

அந்த ஊழல் ஏற்படாமல் இருந்திருந்தால் நுவரெலியாவில் 200 பாடசாலைகள் கட்டியமைத்திருக்கலாம். 

அமைச்சர் பதவிகளையும், தொழிற்சங்க தலைவர் பதவிகளையும் வைத்துக் கொண்டுள்ள சிலர் சாதாரண மக்களின் வாழ்க்கையில் விளையாடி கொண்டு வருகின்றனர். இதனால் அவர்களின் உரிமைகள் பாதிப்புக்குள்ளாகின்றது. 

அரசாங்கத்தை முறையாக வழிநடத்த நாம் பலமுறை முயற்சித்துள்ளோம். தாத்தாவுக்கு சொல்வதை போல் அவர்கள் புரிந்து கொள்கின்றனர். மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில் அமெரிக்க டோன் நிறுவனத்திற்கு கிராந்துரு கோட்டை, களுவத்தை, செவனகல பிரதேசம், பொலன்னறுவை சோமாவதி தூபிக்கு அருகில் என 2000 தொடக்கம் 5000 வரையிலான ஏக்கர் நிலங்கள் வழங்கப்பட்டுள்ளது. இது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டோன் நிறுவனத்திற்கு. ஆனால் மலையக தோட்ட தொழிலாளர்களுக்கு 7 பேர்ச் வீதம் இந்த அரசுகளால் வழங்க முடியவில்லை. 

இந்த நாட்டின் பொலிஸார் நன்கு திறமைமிக்க பய்ற்சி பெற்றவர்கள். நாட்டின் இடம்பெறும் பாரிய குற்ற செயல்களை கண்டு பிடிக்க வள்ளவர்கள். இருப்பினும் அரசாங்கா தலையீட்டால் செய்யப்படும் குற்றங்கள் இவர்களால் கண்டுபிடிக்க முடியாது போகின்றது. 

எனவே உங்களிடம் வாக்கு கேட்க வருவார்கள் நீங்கள் சொல்லுங்கள் அமெரிக்க டோன் நிறுவனத்திடம் சென்று பெற்றுக்கொள்ளுங்கள் என்று அப்போது பார்க்கலாம். உரிமைகள் மறுக்கப்பட்டு அடுக்கி ஒடுக்கி வாழும் இந்த நாட்டு மக்களுக்கு வெளிநாட்டு கடன்கள் அல்லாமல் உழைப்பின் சக்தியின் ஊடாக புதிய ஒரு நாட்டை கட்டியெழுப்ப எம்மோடு கைகோர்த்து செல்லுங்கள் என அழைப்பு விடுவதுடன் தலைகுணிந்து கும்பிடு போடும் கலாச்சாரம் மாற்றியமைக்கப்பட்டு சகல அரச அதிகாரிகளும் மக்களும் தலை நிமிர்ந்து வாழக்கூடிய நாட்டை கட்டியெழுப்போம் என அவர் மேலும் தெரிவித்தார். 


(சதீஸ்குமார், கிரிஷாந்தன்)

No comments

Powered by Blogger.