Header Ads



கறுப்பு தினமாக மாறிய பாராளுமன்றம் - அமைச்சர்களை காணவில்லையென எதிர்க்கட்சி புலம்பல்


ஆளும் தரப்பினரிடம் கேட்க எந்தவொரு கேள்விக்கும் பதில் தெரிவிக்காது நிராகரிக்கப்பட்ட "பாராளுமன்ற கறுப்பு தினமாக" இன்றைய தினம் -05- மாறியுள்ளது.

இவ்வாறு எமது கேள்விகளை புறக்கணித்து ஆளும் தரப்பு செயற்படுவது எமது சிறப்புரிமையை மீறும் செயல் என எதிர்க்கட்சி சபையில் தமது கடும் அதிருப்தியை வெளியிட்டனர். பாராளுமன்றத்தை ஒத்திவைத்துவிட்டு சகல தேர்தல்களையும் முடித்துவிட்டு புதிய அரசாங்கம் ஒன்றினை உருவாக்க இடமளிக்க வேண்டும் எனவும் சபையில் ஒருசிலர் வலியுறுத்தினர்.

பாராளுமன்றம் இன்று பாராளுமன்ற அமர்வுகள் ஆரம்பிக்கப்பட்ட வேளையில் வாய்மூல விடைக்கான வினா நேரத்தில் போது எதிர்க்கட்சி தரப்பினரிடம் இருந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் சொல்வது வழக்கமானதும் கட்டயமான ஒன்றாகும். 

எனினும் இன்று எதிர்க்கட்சி தரப்பில் 15 கேள்விகள் எழுப்பப்பட்டிருந்த போதிலும் கூட எந்தவொரு கேள்விக்கும் பதில் தெரிவிக்க ஆளும் தரப்பின் அமைச்சர்கள் எவரும் வருகை தந்திருக்கவில்லை. இதனை அடுத்து பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.