September 13, 2019

இலங்கை ஜனா­தி­பதித் தேர்தல் அமெ­ரிக்­க - சீனா­ போட்­டி­யா­கவே அமை­யவி­ருக்­கி­றது

எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்தல் அடிப்­ப­டையில் ஐக்­கிய தேசிய கட்­சிக்கும் ஸ்ரீ லங்கா பொது­ஜன பெர­மு­ன­வுக்கும் இடை­யி­லான போட்­டி­யாக அமையப் போவ­தில்லை.  மாறாக அமெ­ரிக்­கா­வுக்கும்  சீனா­வுக்கும்  இடை­யி­லான போட்­டி­யா­கவே அமை­வி­ருக்­கி­றது.  நாம் தேர்தல் நட­வ­டிக்­கை­களை ஆரம்­பிப்­ப­தற்கு முன்­னரே அவ்­விரு நாடு­களும் எமது தேர்தல் தொடர்­பான வியூ­கங்­களை வகுக்க தொடங்கி விட்­டன. அவர்கள் தேர்லின் முடி­வுக்கு அமைய நாட்டை அடி­மைப்­ப­டுத்­திக்­கொள்ள முயற்­சிப்­ப­தாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விஜ­ய­தாச ராஜ­பக்ஷ தெரி­வித்தார்.   

அவரின் இல்­லத்தில் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில்  இவ்­வாறு தெரி­வித்தார். விஜே­தாச ராஜ­பக்ஷ மேலும் கூறி­ய­தா­வது ;   

மக்கள் பிர­தி­நி­திகள் அவர்­களின்  சொத்து விப­ரங்­களை  வெளி­யிட வேண்­டி­யது சட்ட ரீதி­யாக கட்­டா­யப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள நிலையில்  அவர்கள் அந்த விப­ரங்­களை வழங்­காமல்  இருப்­பது மக்கள் மத்­தியில் பர­வ­லாக பேசப்­பட்டு வரு­கி­றது. நாட்டில் ஜன­நா­யக மற்றும் நல்­லாட்­சியை  நிலை­நாட்­டு­வ­தற்­காக சிறி­மாவோ  பண்­டார நாயக்­கவே இந்த சட்­டத்தை அமுல்­ப­டுத்­தினார். இருப்­பினும் இந்த  சட்டம் முறை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட வில்லை.  

இந்த அர­சாங்கம்  ஆட்­சிக்கு வந்­ததும் அமைச்சர் தலதா அத்­து­கோ­ரள   இந்த  சட்­டத்தை திருத்­தி­ய­மைப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை எடுத்­தி­ருந்தார். அதன் போது  அமைச்­ச­ர­வையில் நானும் சில யோச­னை­களை முன்­வைத்­தி­ருந்தேன். அந்த யோச­னை­க­ளுக்கு அமைச்­ச­ரவை அனு­மதி வழங்­கி­யி­ருந்­த­தோடு அந்த சட்டம் திருத்­தப்­பட்­டது.  பாரா­ளு­மன்ற  உறுப்­பி­னர்கள் மாத்­தி­ர­மின்றி  சகல மக்கள் பிர­தி­நி­தி­களும் மற்றும்  நிர்­வாக  சேவைப் பிரிவை சேர்ந்த முக்­கிய அதி­கா­ரி­க­ளுக்கும் தொடர்­புப்­பட்ட வகையில் இந்த சட்டம் திருத்­தப்­பட்­டது. அதன் பின்னர் ஒன்­றரை வரு­டங்கள் கடந்­துள்­ளன. 

அதே­போன்று இந்த சட்­டத்தை  திருத்­தி­ய­மைப்­ப­தற்கு  முன்னர் தண்­டப்­ப­ண­மான  10 ஆயிரம் ரூபாவே அற­வி­டப்­பட்­டது. அந்த தொகை தற்­போது ஒரு இலட்சம் ரூபா­வாக அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது.  இந்த திருத்­தங்­க­ளுக்கு அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் கிடைக்­கப்­பெற்­றி­ருந்­தாலும் அது முறை­யாக நடை­மு­றைப்­ப­டத்­தப்­ப­ட­வ­தாக இல்லை. அதற்கு அர­சாங்க தரப்பை சேர்ந்த முக்­கி­யஸ்­தர்கள் சிலர் தடை­யாக இருக்­கி­றார்கள். அதன்­கா­ர­ண­மா­கவே இந்த பிரச்­சினை எழுந்­துள்­ளது. 

கேள்வி : பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் சிலரின் சொத்து விப­ரங்­களை வெளி­யி­டு­மாறு கோரி இலஞ்ச ஊழல் தடுப்பு பிரிவில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. அந்த பெயர் பட்­டி­யலில் உங்­களின் பெயரும் இருப்­ப­தற்­கான வாய்ப்பு உள்­ளதா? 

பதில் : நான் அந்த பெயர் பட்­டி­யலை காண­வில்லை. அவ்­வாறு இருப்­ப­தற்­கான வாய்ப்பும் இல்லை. காரணம் 1997 ஆம் ஆண்டு காலப்­ப­கு­தி­யி­லி­ருந்து எனது சொத்து விப­ரங்­களை பிர­க­டனம் செய்து வரு­கிறேன். அதே­போன்று  1985 ஆம் ஆண்­டி­லி­ருந்து  எனது சொத்­துக்­க­ளுக்­கான வரி பணத்­தையும் செலுத்­தியே வரு­கிறேன். எனது வரு­மானம் மற்றும் செல­வீ­னங்­களை  யாராலும் பரி­சீ­லித்து பார்க்க முடியும். 

கேள்வி : அவ்­வா­றானால் சொத்து விப­ரங்­களை வெளி­யி­டா­த­வர்­களின் பட்­டி­யலில் யார் யாராக இருப்­பார்கள் என்று நீங்கள் கரு­து­கி­றீர்கள் ? 

பதில் : அவர்­களின் தக­வல்­க­ளையே தற்­போது ட்ரான்ஸ்­பெ­ரன்ஸி இன்டர் நெசனல் நிறு­வனம் வெளி­யிட்­டுள்­ளது. இது குறித்து அர­சாங்கம்  ஆராய்ந்து பார்க்க வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். அவ்­வாறு இல்­லா­விட்டால் அர­சாங்கம் இருந்தும் பய­னில்­லா­தது போல் ஆகி­விடும். 

நான்  ஒவ்­வொரு வரு­டமும் எனது சொத்­து­க­ளுக்­காக இரண்­டரை கோடி  ரூபா வரிப்­பணம் செலுத்­து­கிறேன். ஆனால் அது குறித்து மக்­க­ளுக்கு எந்த தக­வலும் தெரி­யாது. அது குறித்து எவரும் கேட்­ப­தா­கவும் இல்லை. அதே­போன்று இலஞ்ச ஊழல் ஆணைக்­கு­ழுவும் நேர்­மை­யாக செயற்­ப­டு­வது அவ­சி­ய­மாகும். 

கேள்வி : ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்­பெற்ற குண்­டுத்­தாக்­குதல் சம்­ப­வங்கள் தொடர்­பான பாரா­ளு­மன்ற தெரிவு குழுவின் விசா­ர­ணைகள் இடம்­பெற்று வரு­கின்ற நிலையில் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக தெரிவு செய்­யப்­பட்­டுள்ள ஒருவர் இது குறித்து புதிய விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்க குழு நிய­மிக்­கப்­பட வேண்டும் என்ற கூறு­கி­றார்கள். இது தொடர்பில்  உங்­களின் நிலைப்­பாடு என்ன ? 

பதில் : இந்த நாட்டில் அர­சாங்கம் என்ற  ஒன்று இல்லை என்­ப­தற்கு இந்த ஏப்ரல் 21 குண்டுத் தாக்­குதல் சம்­ப­வங்கள் சிறந்த உதா­ர­ண­மாகும். இவ்­வாறு தாக்­குதல் ஒன்று இடம்­பெ­று­வ­தற்­கான திட்­டங்கள் இருக்­கின்­றன  என்று  கூறிய போதும் அது குறித்து  அர­சாங்கம் கவனம் செலுத்த வில்லை. சம்­பவம் இடம்­பெற்ற பின்னர் அது தொடர்­பான சாட்­சிகள்  கையில் இருக்கும் போதும்  இது குறித்து இன்னும் நட­வ­டிக்­கை­களும் எடுக்­கப்­ப­டாமல் உள்­ளது. 

இதற்­கான முதல் குற்­ற­வாளி பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க.அடுத்­தவர் சபா­நா­யகர் கரு­ஜய சூரிய. அதன் பின்­னரே சஹரான் குழு­வி­னரை இந்த விட­யத்தில் குற்­ற­வா­ளி­க­ளாக தொடர்புப் படு­கின்­றனர். இது குறித்து ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­கு­ழு­விலும் சாட்சி வழங்­கி­யுள்ளேன். அவ்­வாறு இருக்­கும்­போது மீண்டும் குழு அமைத்து விசா­ரணை முன்­னெ­டுப்­பது என்­பது அவ­சி­ய­மற்­ற­தாகும். 

கேள்வி : திறை­சே­ரியில் நிதி இருப்பு இல்லை என்று குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. அது தொடர்பில் நீங்கள் என்ன நிலைப்பாட்டில் இருக்கிறீர்கள் ? 

பதில் : எனக்கு கிடைத்துள்ள தகவலுக்கு அமைய இந்த மாதத்துடன்  அரச சேவையாளர்களுக்கான கொடுப்பனவுகளை கொடுக்க முடியாத  அளவுக்கு திறைசேரியில் நிதி இல்லை .இந்நிலையில் தொலைத் தொடர்புகள் ஆணைக்குழுவிடம் நிதி கோரப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. கடந்த அரசாங்கம் 11 வருடங்களில் பெற்ற கடன் தொகைக்கு சமமான கடனை இந்த அரசாங்கம் இந்த நான்கரை வருடங்களில் பெற்றுக்கொண்டுள்ளது. 

0 கருத்துரைகள்:

Post a comment