Header Ads



ஜனாதிபதி தேர்தலை பிற்போட, ரணில் சதித்­திட்­டம் - வாசு­தேவ குற்றச்சாட்டு

ஜனா­தி­பதி முறை­மையை இல்­லா­ம­லாக்­கு­மாறு தெரி­வித்து அமைச்­ச­ரவை பத்­திரம் ஒன்றை சமர்ப்­பிக்க பிர­தமர் ரணில் விக்­கிர­ம­சிங்க நட­வ­டிக்கை எடுத்து வரு­கின்றார். இதன் மூலம் தேர்­தலை பிற்போடும் சதித்­திட்­டமே மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றது என ஜன­நா­யக இட­து­சாரி முன்­ன­ணியின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான வாசு­தேவ நாண­யக்­கார தெரி­வித்தார்.

சோச­லிச மக்கள் முன்­னணி கொழும்பில் நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரி­விக்­கையில்,

பிர­தமர் ரணில் விக்­கிர­ம­சிங்க ஆரம்­பத் தில் இருந்தே ஜனா­தி­பதி தேர்­தலை பிற்­ப­டுத்தும் நோக்கில் ஒரு­சில தர­கர்­க­ளுடன் இணைந்­து­கொண்டு சதித்­திட்­டங்­களை மேற்­கொண்டு வந்­தி­ருந்தார். தற்­போது ஜனா­தி­பதி முறை­மையை இல்­லா­ம­லாக்­கு­வது தொடர்பில் அமைச்­ச­ரவை பத்­திரம் ஒன்றை சமர்ப்­பிக்க நட­வ­டிக்கை எடுத்­தி­ருக்­கின்றார். நீதி­மன்­றத்­துடன் இந்த நட­வ­டிக்­கையை சிக்­க­லாக்கி இதன் மூலம் தேர்­தலை பிற்­ப­டுத்­து­வதே அவரின் திட்­ட­மாகும்.

பிர­தமர் ரணில் விக்­கிர­ம­சிங்க இவ்­வாறு செயற்­ப­டு­வ­தற்கு பிர­தான கார­ண­மாக இருப்­பது, சஜித் பிரே­­ம­தா­ச­வுடன் அவ­ருக்கு இருக்கும் பிரச்­சி­னை­யாகும். அத்­துடன் ஜனா­தி­பதி தேர்­தலில் ஐக்­கிய தேசிய கட்சி தோல்­வி­ய­டை­வது நிச்­ச­ய­மாகும். அதனை தடுப்­ப­தற்­கான இறுதி முயற்­சி­யா­கவே இதனை மேற்­கொள்­ளப்­போ­கின்றார். அதி­கா­ரத்தை மாற்றும் தேர்­த­லா­கவே ஜனா­தி­பதி தேர்தல் இடம்­பெ­றப்­போ­கின்­றது. அதனால் மக்கள் மிகவும் அவ­தா­ன­மாக இருக்­க­வேண்டும். அவரின் இந்த நட­வ­டிக்­கைக்கு அர­சாங்­கத்தில் இருப்­ப­வர்­களில் பெரும்­பா­லா­ன­வர்கள் ஆத­ர­வ­ளிப்­ப­தில்லை.

 மக்கள் விடு­தலை முன்­னணி இம்­முறை ஜனா­தி­பதி தேர்­தலில் தனித்து போட்­டி­யிட்­டாலும் அவர்கள் இறுதி நேரத்தில் ஐக்­கிய தேசிய கட்­சிக்கு மறை­மு­க­வா­க­வேனும் ஆத­ர­வ­ளிப்­பார்கள். ஏனெனில் கடந்த வருடம் ஒக்­டோபர் மாதம் ஏற்­பட்ட அர­சியல் மாற்­றத்தில் அவர்­களே பிர­த­ம­ரையும் இந்த அர­சாங்­கத்­தையும் பாது­காக்க மும்­மு­ர­மாக இருந்­தார்கள். அதனால் அவர்கள் எமது கூட்­ட­ணியை பரம விரோ­தி­யா­கவே பார்க்­கின்­றார்கள். ஐக்­கிய தேசிய கட்­சிக்கு எதி­ரா­ன­வர்­களின் வாக்­குகள் எமது வேட்­பா­ள­ருக்கு விழு­வதை தடுக்கும் நோக்­கிலே மக்கள் விடு­தலை முன்­னணி தனித்து போட்­டி­யிட தீர்­மா­னித்­தி­ருக்­கின்­றது.

 ஜனா­தி­பதி வேட்­பாளர் தொடர்பில் ஐக்­கிய தேசிய கட்­சிக்குள் பாரிய பிரச்­சினை ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. இவர்கள் இந்த நிலை­மையை ஜன­நா­யக முறை­யி­லான விவா­தமே இடம்­பெ­று­வ­தாக தெரி­விக்­கின்­றனர். அப்­ப­டி­யாயின் அமைச்­சர்கள் இரு­வ­ருக்கு எதி­ராக ஏன் ஒழுக்­காற்று நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும் என்று கேட்கின்றேன். ஜனநாயக முறைப்படி செயற்படுவதாக இருந்தால் ஐக்கிய தேசிய கட்சி ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்காத நிலையில் தானே ஜனாதிபதி வேட்பாளர் என தெரிவித்து வரும் சஜித் பிரேமதாசவுக்கு எதிராக ஏன் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்காமல் இருக்கின்றது. இதுதானா அவர்களின் ஜன நாயகம் என்று கேட்கின் றோம் என்றார். 

No comments

Powered by Blogger.