Header Ads



தமிழ் சட்டத்தரணிகளை பௌத்தபிக்குகள், தாக்கியதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

முல்லைத்தீவில், இன்றையதினம் பௌத்த பிக்குவின் உடலை தகனம் செய்வதில் ஏற்பட்ட பதற்றத்தின் போது பௌத்த பிக்குகளால் சட்டத்தரணிகள் உள்ளிட்ட சிலர் தாக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் சட்டத்தரணிகள் சிலர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்திற்குள் நீதிமன்ற உத்தரவை மீறி பௌத்த பிக்குவின் உடலை தகனம் செய்த சமயத்தில், அந்த இடத்திற்கு சென்று நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டிய சட்டத்தரணிகளே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், அவர்களுடன் சென்ற பொதுமக்களும் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

தாக்குதலில் காயமடைந்த மூவர் முல்லைத்தீவு பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர்களில் ஒருவர் ஆலய பூசகர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாம் பௌத்த பிக்குக்களால் தாக்கப்பட்டோம் என குறிப்பிட்டு, சட்டத்தரணிகளான சுகாஷ், கணேஷ்வரன் உள்ளிட்ட மூவர் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

10 comments:

  1. Ajan what happened there.பிக்கு சார்மார் உங்க ஆட்கள்தானே.இப்போ என்னாச்சி

    ReplyDelete
  2. Yes என்னாச்சு?

    ReplyDelete
  3. Yes என்னாச்சு?

    ReplyDelete
  4. @Rizard, பௌத்த பிக்குகளுக்கு எதிராக போராட உங்களுக்கு துணிவும் இல்லை, அப்படித்தான் சிறு எதிர்ப்பு செய்தாலும் ஊர் ஊராக கடைகளும் பள்ளிவாசல்களும் எரியும்.

    ReplyDelete
  5. ரத்தின தேரருகிட்ட போயிட்டு சொல்லுங்களேடா.

    ReplyDelete
  6. இவன்கள அடக்க யாருக்கும் துணிச்சல் இல்லைடா!

    ReplyDelete
  7. Where is Ajan Anthony's Pikku Sirs..... How is this?

    ReplyDelete
  8. In Kalmunai they were together, in Mllaithivu they became enemies

    ReplyDelete
  9. இதில் தமிழர்களும் முஸ்லிம்களும் ஒற்மைபடனும்.

    ReplyDelete
  10. We should forgive and forget the past each other and work together to get a solution from this Racist monks illegal activities

    ReplyDelete

Powered by Blogger.