Header Ads



ரணில் - சஜித் இன்றைய சந்திப்பில் நடந்ததென்ன..? மாற்றுவழிக்கு தள்ளப்பட்டுள்ள சஜித்

“ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முன்னர் அதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். ஜனாதிபதி நிறைவேற்று அதிகார நீக்கம் உட்பட பல விடயங்கள் குறித்து கொள்கை வகுக்கப்பட வேண்டும். எல்லாவற்றுக்கும் முன்னர் தேர்தல் அறிவிக்கப்படவேண்டும்.வேட்பாளர் யார் என்பதல்ல பிரச்சினை”

இவ்வாறு இன்று இரவு அமைச்சர் சஜித் பிரேமதாஸ மற்றும் அவருக்கு நெருக்கமான அமைச்சர்களிடம் உறுதியாகக் கூறிவிட்டார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

ஜனாதிபதி வேட்பாளர் விவகாரம் குறித்து இறுதி முடிவெடுக்க இன்று அலரிமாளிகையில் நடந்த கூட்டம் இறுதியாக எந்த முடிவுகளும் இன்றி முடிந்தது.

ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுடன் மட்டுமல்ல இதர தோழமைக் கட்சிகளின் தலைவர்களுடனும் பேச்சு நடத்தி அதன் பின்னர் கட்சிக்குள்ளும் இணக்கப்பாட்டை ஏற்படுத்தி வேட்பாளர் விடயத்தில் தீர்வை காணலாமே தவிர பொதுக்கூட்டங்களை நடத்தியல்லவென ரணில் இன்றைய சந்திப்பில் கூறியதாக தகவல்.

அமைச்சர் சஜித் பிரேமதாஸ தரப்பின் கருத்துக்கள் இன்றைய கூட்டத்தில் எடுபடவில்லை என்பதால் ரணிலை நம்பியிராது மாற்றுவழி ஒன்றை யோசிக்கும் நிலைமைக்கு சஜித் தரப்பு தள்ளப்பட்டுள்ளதாக நம்பகரமாக அறியமுடிந்தது. TN

2 comments:

  1. Ranil advicing by mossad.
    Mossad can success them plan with Ranil.this is the reason ranil trying to contest president
    Election.or gotha also will do samething.better to avoid .dua always will help us.

    ReplyDelete
  2. Ranil advicing by mossad.
    Mossad can success them plan with Ranil.this is the reason ranil trying to contest president
    Election.or gotha also will do samething.better to avoid .dua always will help us.

    ReplyDelete

Powered by Blogger.